/* */

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு: புத்தகம் அச்சிடும் பணி துவக்கம்

குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்க தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் பாடப்புத்தகங்களில் அச்சிடும் பணி துவக்கம்.

HIGHLIGHTS

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு: புத்தகம் அச்சிடும் பணி துவக்கம்
X

குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்க தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் பாடப்புத்தகங்களில் அச்சிடும் பணியினை ஆட்சியர் விஷ்ணு துவக்கி வைத்தார்.

குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் வண்ணம் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் (கட்டணமில்லா) குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாடப்புத்தகங்களில் எண்கள் அச்சிடுதல் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு இன்று தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறுகூட்டரங்கில் ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டம் சார்பில், குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் வண்ணம் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் (கட்டணமில்லா) குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாடப்புத்தகங்களில் எண்கள் அச்சிடுதல் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.விஷ்ணு இன்று (28.03.2022) தொடங்கி வைத்தார்.

ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு திட்டம் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் பெற்றோரை இழந்த குழந்தைகள், பெற்றோர் யாராவது ஒருவரை இழந்த குழந்தைகள் இல்லது மாற்றுத்திறனாளிகளின் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000/- உதவித்தொகை வழங்கப்படுகிறது.

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள் தாய், தந்தை, பெற்றோரை இழந்த குழந்தைகள், சிறைவாசிகளின் குழந்தைகள், நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு முன்னூரிமை அளிக்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 75 குழந்தைகள் மாநில அரசின் சிறப்பு நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் ரூ.3 இலட்சம் தொகையும், 41 குழந்தைகளுக்கு ரூ. 2.50 இலட்சம் தொகையும் வழங்கப்பட்டுள்ளது.

குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் வண்ணம் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் (கட்டணமில்லா) குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாடப்புத்தகங்களில் எண்கள் அச்சிடுதல் பணியினை இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கல்வித்துறை மூலம் அனைத்து பள்ளிகளிலுள்ள மாணவியர்களின் பாடபுத்தகங்களிலும் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் தொடர்ந்து அச்சிடப்பட்ட உள்ளது.

இந்நிகழ்வில், நிதி ஆதரவு மற்றும் வளர்ப்பு பராமரிப்பு ஒப்புதல் வழங்கும் குழு உறுப்பினர்கள் சுசீலாபாண்டியன், அருட்சகோதரர் ஞானதினகரன், விஸ்வநாதன், குழந்தைகள் நலக்குழு தலைவர் சந்திரசேகர் மற்றும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் அருள்செல்வி மற்றும் குழந்தை பாதுகாப்பு அலகு பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 28 March 2022 12:08 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  2. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  3. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  4. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  5. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.
  6. இராஜபாளையம்
    இராஜபாளையம் அருகே ,போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயன்றவர்களுக்கு கை,...
  7. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்பக் காய்ச்சும் பால்: நன்மையா? தீமையா?
  8. லைஃப்ஸ்டைல்
    நகைச்சுவையான பிறந்தநாள் வாழ்த்துகளின் தொகுப்பு..!
  9. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  10. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...