/* */

நீர்வாழினங்கள் பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

தாமிரபரணி ஆற்றில் கழிவு கலப்பதை தடுத்து நீர்வாழினங்கள் பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை, கலெக்டர் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

நீர்வாழினங்கள் பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
X

தமிழகத்தில், நெல்லை மாவட்டத்தில் உற்பத்தியாகி தமிழகப்பகுதி கடலிலையே கலக்கக்கூடிய ஒரே ஜீவநதி தாமிரபரணி . ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி, சமவெளிப் பகுதிகளில் 128 கிலோமீட்டர் பயணித்து கடலில் கலக்கிறது . தாமிரபரணி ஆற்றின் கரையோரங்களில் பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருக்கோவில்கள், ஆற்றின் நடுவே கல் மண்டபங்களும், படித்துறைகளும், மருத்துவ குணம் படைத்த மரங்களும், அதனை ஒட்டியுள்ள நீர் நிலைகளுக்கு வந்து செல்லும் நீர் வாழ் பறவைகளும், பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும்.

புண்ணிய நதியான தாமிரபரணி ஆற்றை பாதுகாக்கும் விதமாக, அதனை ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற நெல்லை மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது . அதன் ஒரு கட்டமாக தாமிரபரணி ஆற்றின் கரை ஓரங்களிலும், அந்தந்தப்பகுதி இயற்கை ஆர்வலர்கள் ,அதிகாரிகள், மாணவர்கள் என 59 இடங்களில் தாமிரபரணி தடங்கள் கண்டறியப்பட்டு, அதனைப் பாதுகாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது.

அதன்படி, தென்பாண்டி சைக்கிள் விழிப்புணர்வு பேரணியை வாரந்தோறும் நடத்த முடிவு எடுத்து, அதன் தொடக்க விழா, இன்று நெல்லையில் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நெல்லையில் இருந்து திருவேங்கடநாதபுரம் வரை 18 கிமீ தூரம் நடைபெற்ற இந்த பேரணியில், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன் ஆகியோர் பங்கேற்று சில கிமீ தூரம் சைக்கிள் ஓட்டினர்.

நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அளித்த பேட்டியில், தாமிரபரணி ஆற்றில் கழிவுகள் கலக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு, அதனை தடுப்பதற்காக தண்ணீரை மறுசுழற்சி முறையில் சுத்தப்படுத்தும் திட்டங்களை மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது. நெல்லை மாநகராட்சி பகுதிகளில் தாமிரபரணி ஆற்றின் ஓரங்களில் கழிவுகளை கலப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்கும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று தெரிவித்தார்.

Updated On: 31 July 2021 6:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்
  4. நாமக்கல்
    நீரோடையை மறைத்து சிப்காட் அமைக்க எதிர்ப்பு; நாமக்கல்லில் விவசாயிகள்...
  5. லைஃப்ஸ்டைல்
    தினமும் காலைப் பொழுதுகளை மிக அழகாக்கும் காலை வணக்கம் கவிதைகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    உறவுகளுக்கு, நட்புக்கு அன்பின் வெளிப்பாடாக முன்கூட்டியே சொல்வோம்...
  7. லைஃப்ஸ்டைல்
    தீபாவளிக்கு போனஸாக, அட்வான்ஸ் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  8. லைஃப்ஸ்டைல்
    உங்கள் இல்லத்தில் அன்பு செழிக்கட்டும்! ஆனந்தம் நிலைக்கட்டும்!! -...
  9. லைஃப்ஸ்டைல்
    கவிதை வரிகளில் பிறந்தநாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  10. லைஃப்ஸ்டைல்
    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்..!