/* */

திருச்சியில் ஹீலியம் கியாஸ் சிலிண்டர் வெடித்து பலூன் வியாபாரி உயிரிழப்பு

திருச்சி கோட்டை பகுதியில் ஹீலியம் கியாஸ் சிலிண்டர் வெடித்து பலூன் வியாபாரி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

திருச்சியில் ஹீலியம் கியாஸ் சிலிண்டர் வெடித்து பலூன் வியாபாரி உயிரிழப்பு
X

கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் சேதம் அடைந்த ஆட்டோ.

திருச்சி மெயின் கார்டு கேட், சூப்பர் பஜார், சிங்காரத்தோப்பு, மேலப்புலி வார்டு ரோடு ஆகிய பகுதிகளில் முக்கியமான ஜவுளிக்கடைகள் மற்றும் நகை கடைகள் உள்ளன. தற்போது தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 20 நாட்களே இருப்பதாலும், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் தீபாவளி பண்டிகை மற்றும் நவராத்திரி விழா பண்டிகைகளில் பொருட்கள் வாங்குவதற்காக இந்த கடைவீதி பகுதியில் மக்கள் கூட்டம் தினமும் அலை மோதி வருகிறது. இந்நிலையில் இன்று இரவு 8 மணி அளவில் மேலப்புலி வார்டு சாலையில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த ஒரு ஆட்டோ திடீரென குண்டு வெடித்தது போல் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் அந்த பகுதியில் நின்ற பொதுமக்களும் ஜவுளிக்கடையில் துணிகள் எடுப்பதற்காக வந்தவர்களும் அலறி அடித்து ஓடினார்கள். இது பற்றிய தகவல் அறிந்ததும் கோட்டை போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது அங்கு அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சி அடைய வைத்தது. பயங்கரமான குண்டு வெடித்தது போன்று ஆட்டோ உருக்குலைந்து காணப்பட்டது. அதன் அருகில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.


இது பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்த நிலையில் கிடந்தவர் பலூன் வியாபாரி என்றும் அவர் பலூனுக்கு கியாஸ் நிரப்ப பயன்படுத்தும் ஹீலியம் கியாஸ்சிலிண்டரை அந்த ஆட்டோவில் ஏற்ற முயன்ற போது அடித்து அது வெடித்து சிதறியதும் தெரிய வந்தது. ஆனால் அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை .திருச்சி கடைவீதி பகுதியில் இன்று நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோட்டை போலீசார் இது தொடர்பாக ஒரு வழக்கு பதிவு செய்து ஹீலியம் கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்த பலூன் வியாபாரி யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகிறார்கள். மக்கள் அதிகமாக கூடிய நின்ற இடத்தில் இந்த சிலிண்டர் வெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 4 Oct 2022 6:54 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் கோடைகால நீச்சல் பயிற்சி
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இருந்து ஜவ்வாதுமலைக்கு இயற்கை சுற்றுலா
  3. நாமக்கல்
    ராஜவாய்க்காலில் திடீரென தண்ணீர் நிறுத்தம்; விவசாயிகள் கடும் பாதிப்பு
  4. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் முன்பு வணிக வளாக வழக்கு, சிறப்பு...
  5. நாமக்கல்
    பிரதமர் மோடி தேர்தல் பிரச்சார பேச்சைக் கண்டித்து மகளிர் காங்கிரசார்...
  6. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.2.23 கோடி
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே பட்டப் பகலில் வீட்டுக்குள் புகுந்து ரூ. 17 லட்சம்...
  8. தமிழ்நாடு
    திருவண்ணாமலை To சென்னை கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே!
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே வேலை வாங்கித் தருவதாக மோசடி: தலைமறைவு நபர் 2...
  10. ஈரோடு
    அத்தாணி அருகே தீர்த்தம் எடுக்க வந்த போது பவானி ஆற்றில் மூழ்கி இருவர்...