/* */

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் : ஆணையாளர் சரண்யா அரி ஆய்வு

ஸ்மார்சிட்டிதிட்டம் - கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தூத்துக்குடியில் ரூ.298.5 கோடி மதிப்பிலான திட்ட பணிகள் முதல் கட்டமாக துவங்கப்பட்டன.

HIGHLIGHTS

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் : ஆணையாளர் சரண்யா அரி ஆய்வு
X

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சரண்யா அரி 

இந்தியா முழுவதிலும் தேர்தெடுக்கப்பட்ட 100 நகரங்களில், உலகத் தரம் வாய்நத உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் நோக்கத்தோடு, மத்திய அரசு 2015ம் ஆண்டு ஜூன் மாதம் ஸ்மார்சிட்டி என்ற சீர்மிகு திட்டத்தை அறிவித்தது. இதைத்தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தூத்துக்குடியில் ரூ.298.5 கோடி மதிப்பிலான திட்ட பணிகள் முதற்க்கட்டமாக துவங்கப்பட்டன. இதில் பழைய பேருந்து நிலையம் நவீன மயமாக்கல், மழை நீர் வடிகால் கட்டுதல், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி, பூங்காக்கள் அமைக்கும் பணி, தெரு மின்விளக்கு, சாலைகள் அமைக்கும் பணிகள் தற்போது வரை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட விவிடி டேங்க் அருகில் ரூ. 10 கோடியே 73லட்சம் செலவில் கூட்ட அரங்கம் மற்றும் கடைகள் அமைக்கும் பணிகள், மற்றும் சக்தி விநாயகர் புரத்தில் ரூ. 8லட்சத்து 60 ஆயிரம் செலவில் புதிய சாலை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதனை தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் சரண்யா அரி நேரில் ஆய்வு செய்தார். ஓப்பந்தகாரர்களிடம் நடைபெற்று பணிகள் குறித்து கேட்டறிந்து அவற்றை விரைந்து முடிக்க வலியுறுத்தினார்.

ஆய்வின் போது மாநகராட்சி அதிகாரிகள் சரவணன், தனசிங் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Updated On: 13 Jun 2021 9:07 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    கட்சி நிர்வாகிகள் மீது கை வைக்க பயப்படும் எடப்பாடி..!
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழில் ரூமி மேற்கோள்கள் தெரிந்துக்கொள்வோமா?
  3. நாமக்கல்
    ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
  4. லைஃப்ஸ்டைல்
    தனிநபர் அணுகுமுறை மேற்கோள்கள் பற்றித் தெரிந்துக் கொள்வோம்!
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!
  6. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!
  8. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  9. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  10. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை