/* */

தூத்துக்குடி மாவட்டத்தில் டிசம்பர் 4 ஆம் தேதி கிராம உதவியாளர் தேர்வு நடைபெறும் இடங்கள் விவரம்..

தூத்துக்குடி மாவட்டத்தில் டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெறும் கிராம உதவியாளர் தேர்வு இடங்கள் குறித்த விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

தூத்துக்குடி மாவட்டத்தில்  டிசம்பர் 4 ஆம் தேதி கிராம உதவியாளர் தேர்வு நடைபெறும் இடங்கள் விவரம்..
X

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ். (கோப்பு படம்).

தூத்துக்குடி மாவட்டத்தில் டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெற உள்ள கிராம உதவியாளர் தேர்வு குறித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:

தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள 94 கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. தொடர்ந்து, வருவாய் வட்டாட்சியர்கள் மூலம் விண்ணப்பங்கள் கூராய்வு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் உள்ள ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும் டிசம்பர் 4 ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 18 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. தூத்துக்குடி வட்டத்தில், தூத்துக்குடி செயின்ட்.மேரிஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தூத்துக்குடி ஏ.பி.சி வீரபாகு மெட்ரிகுலேஷன் பள்ளி, தூத்துக்குடி சுப்பையா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய மையங்களில் தேர்வு நடைபெறுகிறது.

ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில், ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ கே.ஜி.எஸ் மேல்நிலைப் பள்ளியிலும், திருச்செந்துர் வட்டத்தில் திருச்செந்தூர் வீரபாண்டியபட்டினம் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், ஏரல் வட்டத்தில் சாயர்புரம் போப்ஸ் கல்லூரியிலும் தேர்வு நடைபெறுகிறது.

சாத்தான்குளம் வட்டத்தில் சாத்தான்குளம் டிஎன்டிஏ ஆர்எம்பி புல மாடன் செட்டியார் நேஷனல் மேல்நிலைப் பள்ளியிலும்,

ஓட்டப்பிடாரம் வட்டத்தில், புதியம்புத்தூர் ஜான் தி பாப்டிஸ்ட் மேல்நிலைப் பள்ளி, ஓட்டப்பிடாரம் மகாத்மா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய மையங்களிலும் தேர்வு நடைபெறுகிறது.

எட்டையபுரம் வட்டத்தில் இளம்புவனம் குமாரகிரி சி.கே.டி. மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியிலும், கீழஈரால் டான்போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் தேர்வு நடைபெறுகிறது. கயத்தாறு வட்டத்தில் கயத்தாறு அன்னைநகர் மதர் தெரசா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும் தேர்வு நடைபெறுகிறது.

கோவில்பட்டி வட்டத்தில், கோவில்பட்டி கே.ஆர். நேஷனல் பொறியியல் கல்லூரியிலும், விளாத்திகுளம் வட்டத்தில் நாகலாபுரம் மகாராஜபுரம் சீனி மெட்ரிகுலேஷன் பள்ளியிலும், விளாத்திக்குளம் கே.ஆர். நகர் கவியரசர் அண்ணாமலை ரெட்டியார் நினைவு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், வில்வமரத்துப்பட்டி ஷாரோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் தேர்வு நடைபெறுகிறது.

இணையவழியில் பதிவு செய்து ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வில் கலந்து கொள்ள விண்ணப்பத்தில் பதிவு செய்த செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதன் மூலம் அனுமதி சீட்டினை விண்ணப்தாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், கிராம உதவியாளர் பணிக்கு இணைய வழியில் விண்ணப்பித்த இணையதள முகவரியான https//agaram..tn.gov.in/onlineforms/formpage_open.php?id=43-174 என்ற இணையதளத்தின் உள்ளே சென்று பதிவு எண்ணினையும், செல்போன் எண்ணையும் பதிவு செய்து அனுமதிச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மாவட்ட வேலைவாய்ப்பகம் மற்றும் முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் உள்ள ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தபால் மூலம் பதிவஞ்சலில் தேர்வு அனுமதிச்சீட்டு அனுப்பி வைக்கப்படும். மேலும் கூராய்வு செய்து ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பதாரர்கள் அனுமதி சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி உரிய தேர்வு மையத்திற்கு சரியான நேரத்தில் கலந்து கொள்ளுமாறு தேர்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்து விண்ணப்பதாரர்களும் தேர்வு நடைபெறும் நாளில் காலை 9.30 மணிக்கு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர். விண்ணப்தாரர்கள் எவரும் தேர்வு அறைக்குள் காலை 9.50 மணிக்கு பின் அனுமதிக்கப்படமாட்டார்கள். காலை 10.50 மணிக்கு முன் தேர்வு அறையை விட்டு வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள்.

அனுமதிச்சீட்டு இல்லாமல் எந்த விண்ணப்பதாரர்களும் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். விண்ணப்பதாரர்கள் கருப்பு பால்பாயின்ட் பேனாவை மட்டும் பயன்படுத்த வேண்டும். அனுமதிச்சீட்டு மற்றும் கருப்பு பால்பாயிண்ட் பேனாவைத் தவிர வேறு எந்த பொருளையும் தேர்வறைக்குள் கொண்டு வரக்கூடாது.

விண்ணப்பதாரர்கள் செல்போன், புத்தகங்கள், கைப்பைகள் மற்றும் வேறு எந்தவொரு மின்னணு சாதனங்களையும் தேர்வு மையத்திற்குள் கொண்டு வரக்கூடாது என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Updated On: 30 Nov 2022 5:31 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தைத்திருநாளும் தமிழர்களின் பாரம்பரியமும்
  2. லைஃப்ஸ்டைல்
    உலகெங்கும் பக்ரீத் கொண்டாட்டங்களில் உள்ள சுவாரஸ்ய வேறுபாடுகள்
  3. வாகனம்
    வரே வா...வரப்போகுது ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450..! எக்கச்சக்க...
  4. இந்தியா
    மம்தா பானர்ஜிக்கு பாரத் சேவாஷ்ரம் சங்க துறவி நோட்டீஸ்
  5. டாக்டர் சார்
    அமைதியான எதிரி..! அமைதியான மாரடைப்பு..! உஷாரா இருக்கணும்ங்க..!
  6. வீடியோ
    🔴LIVE : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர் சந்திப்பு |"தனி...
  7. அரசியல்
    'மேற்கு வங்க காங்கிரசை காப்பாற்றுவதே எனது போராட்டம்': கார்கேவிற்கு...
  8. உலகம்
    ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் உயிரிழப்பு..!
  9. விளையாட்டு
    ஆர்சிபி வீரர்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்த்த தோனி! தேடிசென்று...
  10. இந்தியா
    ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் பேரணியில் பேசாமல் வெளியேறியது...