/* */

மானிய விலையில் ஆட்டோ வேண்டுமா? உடனே விண்ணப்பம் செய்யுங்கள்…

தூத்துக்குடி மாவட்டத்தில் மானிய விலையில் ஆட்டோ வாங்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

மானிய விலையில் ஆட்டோ வேண்டுமா? உடனே விண்ணப்பம் செய்யுங்கள்…
X

ஆட்டோ (மாதிரி படம்).

தமிழ்நாட்டில் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கட்டுமானத் தொழிலாளர்கள், வாகன ஓட்டுநர்கள், பனைத் தொழிலாளர்கள் என மொத்தம் 18 வகையான நல வாரியங்கள் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றன.

நல வாரியங்களில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி, குழந்தைகளின் கல்விக்கு உதவி, மருத்துவ உதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகள் அரசு மூலம் செய்யப்படுகிறது. இந்த நிலையில், மானிய விலையில் தற்போது ஆட்டோ வழங்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் முருகப் பிரசன்னா வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை கீழ் செயல்பட்டு வரும் அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ளவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், நல வாரியத்தில் தற்போது வரை புதுப்பித்தல் உள்ள பெண் தொழிலாளர்களுக்கு மானிய விலையில் ஆட்டோ வழங்குவது தொடர்பான விண்ணப்பங்கள் தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் பெறப்பட்டு வருகின்றன.

எனவே, மானிய விலையில் ஆட்டோ பெற விரும்பும் பெண் ஓட்டுநர்கள் https://tnuwwb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்தோ அல்லது அலுவலகத்தில் நேரில் பெற்றோ விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து மீண்டும் அலுவலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

மேலும், விவரங்களுக்கு தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் நலத் துறை அலுவலக கட்டிடத்தில் செயல்படும் சமூக பாதுகாப்புத் திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தை நேரில் அணுகலாம் என்று தூத்துக்குடி சமூக பாதுகாப்புத் திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் முருகப்பிரசன்னா தெரிவித்து உள்ளார்.

Updated On: 2 Dec 2022 9:47 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்