/* */

தூத்துக்குடியில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது

காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள காவலர் நினைவு ஸ்தூபிக்கு எஸ்பி ஜெயக்குமார் மலர் வளையம் வைத்து அஞ்சலி

HIGHLIGHTS

தூத்துக்குடியில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது
X

காவலர் நினைவு ஸ்தூபிக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்

நாடு முழுவதும் அக்டோபர் 21-ந்தேதி காவலர் வீரவணக்க நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் உள்ள காவலர் நினைவு ஸ்தூபிக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, பணியின்போது இறந்த காவலர்களின் தியாகம் மற்றும் அவர்களின் நினைவை போற்றும் விதமாக துப்பாக்கி குண்டுகள் முழங்க இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், "வீர மரணமடைந்த காவலர்களின் தியாகத்தை நாம் இன்று நினைவு கூர்கிறோம். இந்தாண்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் 377 காவலர்கள் நம்மைவிட்டு பிரிந்துள்ளனர். இவர்கள் விட்டுச் சென்ற பணிகளை செய்து முடிப்போம், அவர்களின் வீரத்தியாகம் வீண்போகாது என்று இந்த வீரவணக்க நாளில் உறுதி மொழி ஏற்போம்" என பேசினார்.

இந்த வீர வணக்க நாள் நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, தூத்துக்குடி தலைமையிட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன், காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி கணேஷ், தூத்துக்கு ஊரக உட்கோட்டம் சந்தீஸ், திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், ஸ்ரீவைகுண்டம் வெங்கடேசன், சாத்தான்குளம் கண்ணன், மணியாச்சி சங்கர், கோவில்பட்டி உதயசூரியன், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு சம்பத், ஆயுதப்படை கண்ணபிரான், பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர்கள் கணேஷ்குமார், ஷாமளாதேவி மற்றும் பவித்ரா, காவல் ஆய்வாளர்கள் ஆயுதப்படை சுடலை முத்து, தூத்துக்குடி தென்பாகம் ஆனந்தராஜன், மத்திய பாகம் ஜெயப்பிரகாஷ், வடபாகம் முருகன், முத்தையாபுரம் ஜெயசீலன், தாளமுத்துநகர் ஜெயந்தி, தெர்மல் நகர் ராதிகா, போக்குவரத்துப்பிரிவு மயிலேறும்பெருமாள் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையம் வனிதா, ஆயுதப்படை உதவி ஆய்வாளர் நங்கையர் மூர்த்தி உட்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 21 Oct 2021 4:21 AM GMT

Related News