/* */

தூத்துக்குடியில் நாளை பள்ளி வாகனங்கள் ஆய்வு: வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தகவல்

THOOTHUKUDI-Inspection of school vehicles RTO Information.

HIGHLIGHTS

தூத்துக்குடியில் நாளை பள்ளி வாகனங்கள் ஆய்வு: வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தகவல்
X

தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலக மைதானத்தில் நாளை நடைபெறும் ஆய்வில் அனைத்து பள்ளி வாகனங்களை தவறாது ஆஜர்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் எஸ்.விநாயகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு மோட்டார் வாகன பள்ளி வாகனங்களுக்கான ஒழுங்கு மற்றும் கட்டுப்பாட்டு விதிகள் 2012ன் படி வருடத்திற்கு ஒரு முறையாவது அனைத்து பள்ளி வாகனங்களையும் மாவட்ட அளவிலான சிறப்பு குழு பள்ளி வளாகத்தில் அல்லது பொது இடத்தில் ஆய்வு செய்து பொதுச்சாலையில் இயக்க தகுதி வாய்ந்ததாக உள்ளதா என ஆய்வு செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,

அதன்படி இவ்வலுவலக எல்கைக்குட்பட்ட கல்வி நிலைய வாகனங்களை வருகின்ற 29.10.2021 அன்று தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலக மைதானத்தில் மேற்பார்வை அலுவலர், குழு உறுப்பினர்கள், சார் ஆட்சியர், தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மற்றும் இயக்கூர்தி ஆய்வாளர்கள் முன்னிலையில் கூட்டாய்வு நடததப்படஉள்ளது எனவும், மேற்படி கூட்டாய்வில் அனைத்து பள்ளி வாகனங்களை தவறாது ஆஜர்படுத்த வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் அனுமதிச்சீட்டின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தெரிவித்துள்ளார்.

Updated On: 28 Oct 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு