/* */

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை 805 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தி நாளை 805 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

HIGHLIGHTS

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை 805 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
X
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ்

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் அந்தந்த பகுதியில் வாக்குச் சாவடி மையங்கள் அமைந்துள்ள 805 இடங்களில் காலை மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டில் கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலைகள் ஏற்பட்டு அரசின் தீவிர நடவடிக்கைகளால் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் மூன்றாவது அலை ஏற்படாமல் தடுத்திடும் பொருட்டு அரசு 18-வயதிற்கு மேற்ப்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. நமது தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை தடுத்திடும்பொருட்டு அரசின் உத்தரவின்படி 12.09.2021 அன்று கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடத்தி ஒரு லட்சம் நபர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்திட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த கொரோனா மெகா தடுப்பூசி முகாம் அந்தந்த பகுதியில் அமைந்துள்ள வாக்குச் சாவடி மையங்கள் அமைந்துள்ள 805 இடங்களில் காலை 7 மணி முதல் இரவு ௭ மணி வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி முகாமில் பயிற்சி மருத்துவர்கள், சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட அனைத்து துறையினரும் முழுவீச்சில் பணியில் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 50 நடமாடும் மருத்துவ குழுவும் அமைக்கப்பட்டு மாற்றுத் திறனாளிகள், வீடுகளில் இருந்து வெளியில் வரமுடியாத முதியவர்களுக்கு தடுப்பூசி செலுத்த உள்ளனர்.

அரசு ஊழியர்கள், காவல்துறையினர் பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதால் அவர்களின் ஆதார் எண்களை சேகரித்து இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுய உதவி குழுக்கள், கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளவேண்டும். மேலும் அந்தந்த பகுதியில் உள்ள அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள் , தன்னார்வலர்கள் மூலம் வாக்காளர் பட்டியல் சரிபார்த்து இதுவரையில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் அந்நத்த பகுதியில் உள்ள ஊராட்சிமன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிகள் மூலம் பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பொதுமக்கள் அதிக அளவில் தடுப்பூசிபோட்டுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தை கொரோனா நோய்த்தொற்று இல்லா மாவட்டமாக மாற்றிட ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், கேட்டுக்கொண்டுள்ளார்.

Updated On: 11 Sep 2021 4:08 AM GMT

Related News