/* */

காதலர் தினத்தன்று மரணத்திலும் இணைபிரியாத தம்பதிகள்: திருவாரூர் அருகே சோகம்

திருவாரூர் அருகே காதலர் தினத்தன்று கணவர் உயிரிழந்ததால் மயங்கி விழுந்து மனைவியும் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

காதலர் தினத்தன்று மரணத்திலும் இணைபிரியாத தம்பதிகள்: திருவாரூர் அருகே சோகம்
X

உயிரிழந்த தம்பதியினர்.

திருவாரூர் அருகே உள்ள பள்ளிவாரமங்கலம் கிராமத்தை சேர்ந்த 76 வயதான பக்கிரிசாமி என்பவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் பக்கிரிசாமி உயிரிழந்தார். கணவரின் ,இறப்பை தாங்க முடியாமல் உடல் அருகில் அவருடைய மனைவி சந்திரா அழதபடி இருந்துள்ளார்.

உயிரிழந்த பக்கரிசாமியின் மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்ததால், அவர் வந்த உடன் இறுதி சடங்கு செய்வதற்காக உறவினர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் கணவர் உயிரிழந்த துக்கம் தாங்காமல் எந்நேரமும் அழுதுகொண்டே இருந்த சந்திரா நேற்று திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அவர்களின் மகன் வெளிநாட்டில் இருந்து வருவதற்குள் தந்தை-தாய் இருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

இறப்பிலும் ,இணைபிரியாமல் உயிர் நீத்த இந்த தம்பதிகளை பற்றி அவரது உறவினர்கள் கூறுகையில், மிகவும் அன்பும், அன்னியோன்யமாக பக்கிரிசாமி-சந்திரா தம்பதிகள் வாழ்ந்து வந்தனர். பக்கிரிசாமிக்கு உடல்நிலை சரி இல்லாமல் போனதில் இருந்து அவரது மனைவி சந்திரா மிகவும் கவலை, சோகத்துடனும் காணப்பட்டடார். அடிக்கடி அவருடன் சேர்ந்து நானும் இறந்து விட்டால் அது எனது பாக்கியம் ஆக இருக்கும் என்று கூறி வந்ததாகவும் அது உண்மையாக நடந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து நேற்று அவர்களுடை மகன் வெளிநாட்டிருந்து வந்த நிலையில், கணவன்-மனைவியின் இறுதி சடங்கு நடைபெற்றது. அதில் தம்பதியர்கள் ,இருவரின் உடலையும் சேர்த்து ஒரே பாடையில் வைத்து எடுத்து சென்று கிராம மக்கள் நல்லடக்கம் செய்தனர். 52 ஆண்டுகள் இல்லற வாழ்க்கையில் இணைபிரியாமல் வாழ்ந்த இந்த தம்பதியினர் இறப்பிலும் இணை பிரியாமல் இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் குறிப்பாக காதலர் தினத்தன்று இறப்பிலும் ,இணைபிரியாத தம்பதியினரின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது என்பது உண்மையாக நேசிக்கும் தம்பதிகளிடையே மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Updated On: 15 Feb 2022 12:21 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க