/* */

திருவாரூரில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆய்வு

திருவாரூரில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அமைச்சர் சிவசங்கர் இன்று ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

திருவாரூரில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆய்வு
X

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் சிவசங்கர் 

திருவாரூரில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை திட்டங்கள் குறித்து அமைச்சர் சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டார். இக்கூட்டத்தின் போது அமைச்சர் பேசுகையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. துறைசார்ந்த நலத்திட்டங்களை தொடர்புடைய மக்களுக்கு முழுமையாக கிடைக்கின்றவகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவ, மாணவிகள் தங்கும் விடுதி மற்றும் கல்லூரி விடுதிகளில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். விடுதிகளில் மாணவ, மாணவிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் கண்காணித்து உறுதி செய்துகொள்ள வேண்டும்.

தமிழகத்தில் பொருளாதாரத்தில் சிறுபான்மையின மக்கள் சுயதொழில் மேற்கொள்ள தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் சார்பில் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், சிறுபான்மையின மக்கள் பொருளாதாரத்தில் முன்னேறுவதற்காக மாவட்டங்களில் அரசு மற்றும் அரசு சார்ந்த சிறந்த பயிற்சி நிறுவனங்கள் தொழிற்பயிற்சி திட்டங்களும் வழங்கப்பட்டு வருகிறது.

மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூக-பொருளாதார நிலையினை மேம்படுத்தும் வகையில் பல்வேறு கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுக்கால கடன் திட்டத்தின் கீழ் சிறு தொழில், வியாபாரம் செய்ய தனிநபர்களுக்கு கடனுதவிகள் வழங்கப்படுகிறது.

பெண்களுக்கான கடனுதவி வழங்கும் திட்டத்தின்கீழ் சுய உதவிக்குழுவில் உறுப்பினர்களாக உள்ள மகளிருக்கு கடனுதவிகள் வழங்கப்படுகிறது. ஆடவருக்கான சிறுகடன் திட்டத்தின்கீழ் சுய உதவிக்குழுவில் உறுப்பினர்களாக உள்ள ஆடவருக்கு கடனுதவிகள் வழங்கப்படுகிறது.

கறவை மாட்டுக்கடன் திட்டத்தின் கீழ் கறவை மாடு வாங்குவதற்காக கடனுதவிகள் வழங்கப்படுகிறது. தேசிய பிற்படுத்தப்பட்டோர் மற்றும் நிதி வளர்ச்சி கழகத்தின் மூலம் இளம் தொழிற்கல்வி பட்டதாரிகளுக்கு சுயதொழில் தொடங்குவதற்கு கடனுதவிகள் வழங்கப்படுகிறது. சிறு விவசாயிகள் மற்றும் காய்கறி பயிரிடுவோருக்கான சிறுகடன் திட்டம், சிறு, குறு விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதிகளை அமைக்க மானியத்துடன் கூடிய கடன் அளிக்கும் திட்டங்கள் போன்ற பல்வேறு திட்டங்கள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்களை துறைசார்ந்த அலுவலர்கள் முழுமையாக செயல்படுத்த வேண்டும் என அமைச்சர் .சிவசங்கர் தெரிவித்தார்.

முன்னதாக, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் 6 நபர்களுக்கு ரூ.28830 மதிப்பிலான தையல் இயந்திரம் மற்றும் சலவை பெட்டிகளையும், தமிழ்நாடு நரிகுறவர் நல வாரியத்தின் சார்பில் ஒரு நபருக்கு இறப்பு உதவித்தொகையாக ரூ.25000த்திற்கான காசோலையும், உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தின் சார்பில் 5 நபர்களுக்கு புதிய நலவாரிய அட்டையும், தமிழ்நாடு நரிகுறவர் நலவாரியத்தின் சார்பில் 12 நபர்களுக்கு புதிய நலவாரிய அட்டையினையும் அமைச்சர் வழங்கினார்கள்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் ,சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன்,மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் ரேணுகாதேவி, உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 21 Dec 2021 9:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு