/* */

கொரோனா நிவாரண நிதி: திருவாரூரில்

திருவாரூரில் கொரோனா நிவாரண நிதி இரண்டாயிரம் ரூபாயை எம்.எல்.ஏ மற்றும் ஆட்சியர் பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தனர்

HIGHLIGHTS

கொரோனா நிவாரண நிதி: திருவாரூரில்
X

திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மற்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இருவரும் இணைந்து கொரோனா நிவாரண நிதி இரண்டாயிரம் ரூபாயை பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தனர்.

நாடு முழுவதும் கொரனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தற்போது தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பொது மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையிலும் நிவாரணம் நான்காயிரம் ரூபாய் வழங்கப்படுவதாக அறிவித்திருந்த நிலையில் இன்று முதல் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கப்படுகிறது.

அதன்படி திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள நியாய விலை கடையில் 2000 ரூபாய் வழங்கும் திட்டத்தை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட கழகச் செயலாளருமான பூண்டி கலைவாணன் இணைந்து பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்வை தொடக்கி வைத்தனர். திருவாரூர் மாவட்டம் முழுவதும் கூட்டுறவுத்துறை மூலம் செயல்படும் 728 நியாயவிலைக் கடைகள் மூலம் மொத்தம் உள்ள 3 லட்சத்து 76 ஆயிரத்து 523 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண நிதி முதல்கட்டமாக 2,000 ரூபாய் இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது.

Updated On: 15 May 2021 7:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  2. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  3. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  4. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  5. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  6. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  7. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  8. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  9. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  10. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!