/* */

நெல் விற்பனைக்கு இணையதளத்தில் முன்பதிவு செய்ய விவசாயிகளுக்கு அறிவுரை

திருவாரூர் மாவட்டத்தில், தழிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் விவசாயிகள் நெல் விற்பனை செய்ய, இணையதளத்தில் முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நெல் விற்பனைக்கு இணையதளத்தில் முன்பதிவு செய்ய விவசாயிகளுக்கு அறிவுரை
X

மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன்

திருவாரூர் மாவட்டத்தில், நடப்பு காரீப் 2021-2022 ஆம் ஆண்டு சம்பா பருவத்திற்கு, மாவட்டம் முழுவதும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில், 450 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இவற்றில் நெல் விற்பனை செய்ய ஏதுவாக பயன்பாட்டில் உள்ள இணையதளத்தில் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும்.

இதற்கு, விவசாயி பெயர் ஆதார் எண், புல எண் மற்றும் தங்கள் பகுதிக்குட்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் பெயர் உள்ளிட்ட விவரங்களை www.tncsc.tn.gov.in அல்லது https://www.tncsc-edpc.in/Account/Login இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, கொள்முதல் செய்ய வேண்டிய தேதியை முன்பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் அலைபேசி எண்ணுக்கு, குறுஞ்செய்தி மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தின் பெயர், நெல் விற்பனை செய்யப்படும் நாள் மற்றும் நேரம் ஆகிய விவரங்கள் அனுப்பப்படும். அதன் அடிப்படையில், நீண்ட நேரம் காத்திருக்காமல், குறித்த காலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் நெல்லை விற்பனை செய்யலாம்.

இணைய வழிப்பதிவு தொடர்பாக கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால், கணினி தொழில்நுட்ப அலுவலர்கள் அன்பரசு - 9791714722 மற்றும் வெங்கடேஷ்- 8667709588 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். இணைய வழிப்பதிவினை, தங்கள் அருகாமையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் மேற்கொள்ளலாம் என்று, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Updated On: 23 Jan 2022 1:31 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  2. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  3. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  4. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  5. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  10. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து