/* */

முதன் முறையாக சிலம்பம் கற்கும் பார்வைத்திறன் குறைபாடுடைய அரசுப் பள்ளி மாணவர்கள்

தஞ்சாவூரைச் சேர்ந்த தனியார் (கொற்றவை அறக்கட்டளை) சிலம்ப பயிற்சி சார்பில் இலவசமாக தற்காப்பு சிலம்ப கலையை கற்று தருகின்றனர்

HIGHLIGHTS

முதன் முறையாக சிலம்பம் கற்கும் பார்வைத்திறன் குறைபாடுடைய அரசுப் பள்ளி மாணவர்கள்
X

தமிழகத்தில் முதன் முறையாக சிலம்பம் கற்கும் பார்வைத்திறன் குறைபாடு உடைய அரசுப் பள்ளி மாணவர்கள்.

தமிழகத்தில் முதன் முறையாக சிலம்பம் கற்கும் பார்வைத்திறன் குறைபாடு உடைய அரசுப் பள்ளி மாணவர்கள்.

தஞ்சாவூரில் மேம்பாலம் அருகில் பார்வைத்திறன் குறைப்பாடு உடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பார்வைத்திறன் குறைபாடு உடைய மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் பார்வைத்திறன் குறைபாடு உடைய மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையிலும், அவர்களுக்கு தற்காப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், தஞ்சாவூரைச் சேர்ந்த தனியார் (கொற்றவை அறக்கட்டளை) சிலம்ப பயிற்சி சார்பில் இலவசமாக தற்காப்பு சிலம்ப கலையை கற்று தருகின்றனர். சிலம்ப கம்பின் நுனியில் மணியை கட்டி, பயிற்சியாளர்கள் கூறுவதைக் கேட்டு, அவற்றை கேட்டு அதற்கு ஏற்றார்போல் தங்களது பயிற்சியை 50 க்கும் மேற்பட்டவர்கள் கற்று வருகின்றனர்.

இதுகுறித்து சிலம்பப் பயிற்சியாளர்கள் கூறியதாவது: சிலம்ப கலையை எல்லோரிடமும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் புதிய முயற்சியாக பார்வைத்திறன் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு இப் பயிற்சியை தமிழகத்தில் முதன் முதலாக கற்றுத் தருவதாகவும், உடல் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகள் மற்றும் பார்வையற்றவர்களுக்கு விளையாட்டு துறையில் பல்வேறு விளையாட்டுகள் உள்ளது போல் சிலம்பமும் அவர்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இவற்றை கற்று தருவதாக தெரிவித்தனர்.

Updated On: 14 March 2022 3:30 PM GMT

Related News