/* */

காணொலியில் கலந்துரையாடிய முதலமைச்சருக்கு தஞ்சை விவசாயிகள் நன்றி

காணொலியில் கலந்துரையாடிய முதலமைச்சருக்கு தஞ்சை விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

HIGHLIGHTS

காணொலியில் கலந்துரையாடிய முதலமைச்சருக்கு தஞ்சை விவசாயிகள் நன்றி
X

காணொலியில் பங்கேற்ற ஒரு விவசாயி முதல் அமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து பேசினார்.

தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்த படி தமிழகத்தில் ஓர் ஆண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெற்றவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

சென்னையிலிருந்து வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக மின் இணைப்பு பெற்றவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். இதில் தஞ்சை மாவட்டத்தில் மின் இணைப்பு பெற்ற கண்டிதம்பட்டு கிராமத்தை சேர்ந்த விவசாயி கலியபெருமாள் (85) என்பவர் கூறுகையில், நான் மின்சாரத்திற்கு பதிவு செய்யும்போது 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்று தெரிவித்தனர். இடையில் பலமுறை சென்று மின் இணைப்பு குறித்து கேட்டபோது இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என்று தெரிவித்தனர்.

இதனால் மனம் வெறுத்துபோன நிலையில் இருந்த போது முதல்வர் அவர்களின் ஓர் ஆண்டில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு என்ற திட்டத்தின் கீழ் எனக்கு உடனடியாக மின் இணைப்பு கிடைத்து விட்டது. இது எனக்கு மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் மிகப்பெரிய பயன் தரும் திட்டம் ஆகும். நானும் எனது குடும்பமும் ஆண்டு முழுவதும் வருமானம் பெறும் வகையில் இந்தத் திட்டம் வாயிலாக எனக்கு மின் இணைப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்காக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இத்திட்டத்தின் கீழ் தஞ்சை மாவட்டத்தில் சாதாரண வரிசையில் 2219 பேருக்கும், சுயநிதி திட்டம் ரூ.10 ஆயிரத்தில் 62 பேருக்கும், ரூ.25 ஆயிரத்தில் 27 பேருக்கும், ரூ.50 ஆயிரத்தில் 21 பேருக்கும், தட்கல் திட்டத்தில் ஆயிரத்து 64 பேருக்கும், அரசு திட்டங்கள் 350 சிறப்பு முன்னுரிமை திட்டம் மற்றும் தாட்கோ-ல் 5 பேருக்கும் என மொத்தம் தஞ்சை மாவட்டத்தில் 3398 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பீட்டுத் தொகை ரூ.51.89 கோடியாகும். இத்திட்டத்தின் வாயிலாக 15 ஆயிரத்து 698 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் என்று மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தஞ்சை எம்.பி., எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், எம்.எல்.ஏ.க்கள் திருவையாறு துரை. சந்திரசேகரன், தஞ்சாவூர் டி.கே.ஜி. நீலமேகம் மற்றும் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 16 April 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?