/* */

ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வல்லுநர் குழு அமைக்க வேண்டும் : பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை

ஆறுகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் வல்லுநர் குழு அமைக்க வேண்டும் என்று அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வல்லுநர் குழு அமைக்க வேண்டும் : பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை
X

விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பிஆர்.பாண்டியன் தஞ்சையில் வடவாறு பகுதியில் கழிவு நீர் கலப்பதை நேரில் பார்வையிட்டார்.

தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பிஆர்.பாண்டியன் தஞ்சையில் வடவாறு பகுதியில் கழிவு நீர் கலப்பதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், காவிரி தென்பெண்ணை பாலாறு உள்ளிட்ட ஆறுகள் அனைத்தும் பாசனத்திற்காக உருவாக்கப்பட்டவை. ஆனால் தற்பொழுது கழிவு நீர் ஓடையாக மாறி வருகிறது. குறிப்பாக காவிரி ஆறு பொறுத்தவரை திருப்பூர், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர் மாநகராட்சி உள்ளிட்ட அவற்றின் கழிவுகள் நேரடியாக கலக்கின்றன.

இதனால் கழிவுநீர் ஓடையாக மாறி வருகிறது. இந்த நீர் சாகுபடிக்கு பயன்படுத்த முடியாத அளவிற்கு உள்ளது. மேலும் பெருந்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

குறிப்பாக தஞ்சை நகர பகுதியில் ஓடக்கூடிய வடவாறு முத்துப்பேட்டை வரை, சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் பயணித்து 72 ஆயிரம் ஏக்கருக்கு பாசன வசதியாக இருக்கிறது.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் நீர் ஆதாரமாக விளங்கக்கூடிய இந்த ஆறு கழிவுநீரால் நிலத்தடி நீர்மட்டம் வீணாக கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

பெருந்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தமிழக முதல்வர் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் வல்லுநர் குழு அமைத்து கழிவுநீர் ஆற்றில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை.

Updated On: 10 Jun 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு