/* */

தஞ்சையில் பொது வினியோக கண்காணிப்பு குழு கூட்டம்

தஞ்சையில் பொது வினியோக கண்காணிப்பு குழு கூட்டம் ஆட்சியர் தலைமையில் எம்பி முன்னிலையில் நடைபெற்றது

HIGHLIGHTS

தஞ்சையில் பொது வினியோக கண்காணிப்பு குழு கூட்டம்
X

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் பொது விநியோக கண்காணிப்பு குழு கூட்டம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர்.தீபக் ஜேக்கப் தலைமையில் தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் முன்னிலையில் நடைபெற்றது

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் பொது வினியோக கண்காணிப்பு குழு கூட்டம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர்.தீபக் ஜேக்கப் தலைமையில் தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் முன்னிலையில் இன்று (22.12.2023) நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க தேசிய உணவு பாதுகாப்பு சட்டப் படியும் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு விதிகள் படியும் அமைக்கப்பட்ட பொது விநியோகத் திட்ட கண்காணிப்புக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நியாயவிலை கடைகளின் விவரம் வகை வாரியான நடப்பு குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை, வட்ட வாரியான மற்றும் நியாய விலைகடை வாரியான கண்காணிப்பு குழுக்கள் நடத்தப்பட்ட விவரம், அச்சடித்து வரப் பெற்ற புதிய குடும்ப அட்டைகளின் விவரம் மற்றும் அச்சிட்டு விநியோகம் செய்யப்பட்ட விவரம், புதிய மின்னணு குடும்ப அட்டைகள் கோரும் ஆன்லைன் மனுக்கள் நிலுவை விவரம், அஞ்சல் வழியில் நகல் மின்னணு குடும்ப அட்டை அனுப்பப்பட்ட தற்கான விவரம், ஆன்லைன் புகார்கள் நிலுவை விவரம், பொது விநியோகத் திட்ட அங்காடிகள் செயல்படும் கட்டிடம் விவரம் போன்ற பல்வேறு பொருளடக்கங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகள் வாடகை கட்டிடத்தில் இயங்கும் கடைகளுக்கும், புதிதாக கட்டடிடங்கள் கட்டப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், பகுதிநேர அங்காடிகள் அமைப்பதற்கு தொலைவினை பரிசீலனை செய்து புதியதாக பகுதி நேர அங்காடிகள் திறப்பதற்கு அரசுக்கு முன் மொழிவுகள் அனுப்புவது என்றும் மாவட்டத்தில் ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு மேலுள்ள அங்காடிகளை பிரிப்பதற்கு நடவடிக்கை மேற் கொள்ளப் படவேண்டும் என்றும், வட்ட அளவிலான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் அங்காடி அளவிலான கண்காணிப்புக் குழுக்களை அவ்வப்போது நடத்தப்படவேண்டும் எனவும்,

மாவட்டத்தில்உள்ள 5085 முதியோர் உதவித்தொகை குடும்ப அட்டைகளுக்கும் 139 அண்ணபூர்ணா வகை குடும்ப அட்டைகளுக்கும் தற்பொழுது வழங்கப்படும் அரிசியினை தவிரஇதர பொருள்களையும் வழங்குவதற்கு அரசுக்கு பரிந்துரை செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும் பொது விநியோகத் திட்டத்தில் எவ்வித குறைபாடுகளும் இன்றி செயல் படுவதை கண்காணிக்க தஞ்சாவூர் நகர பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளை ஒரே நேரத்தில் அனைத்து அலுவலர் அடங்கியகுழு ஆய்வு செய்யப் படவேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரைசந்திரசேகரன், மாவட்டஊராட்சிக்குழு தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி, தஞ்சாவூர் மாநகராட்சி துணைமேயர் அஞ்சுகம்பூபதி மற்றும் தமிழ்நாடுநுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சி.தமிழ்நங்கை, வட்ட வழங்கல் அலுவலர்கள், மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் க.கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 22 Dec 2023 6:06 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  2. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்
  3. தொழில்நுட்பம்
    3டி அச்சிடப்பட்ட ராக்கெட் எஞ்சினை வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ: 3டி...
  4. தொழில்நுட்பம்
    எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி, e200..! ஐஐடி மெட்ராஸ் சாதனை..!
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலிருந்து எலக்ட்ரானிக் சாதனங்களை பாதுகாப்பது எப்படி?
  6. வணிகம்
    விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழக்கமான விமான சேவையை தொடரும்:...
  7. லைஃப்ஸ்டைல்
    கல்லூரிகளில் மதிப்பெண்களை வைத்து பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது எப்படி?
  8. வீடியோ
    ஒரே நாளில் 25,000 கிலோ தங்கம் |என்ன நடக்கிறது தமிழகத்தில்?#gold...
  9. இந்தியா
    28,200 மொபைல் இணைப்புகளை துண்டிக்க தொலைத்தொடர்பு துறை உத்தரவு
  10. வீடியோ
    🔴LIVE : சென்னை விமான நிலையத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி ||...