/* */

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகள்

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 11, 12 ஆம் பயிலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் அறிவிப்பு

HIGHLIGHTS

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில்  பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகள்
X

பைல் படம்

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில்11, 12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிலுள்ள11, 12ஆம்வகுப்புபயிலும்பள்ளி, கல்லூரிமாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் ஆண்டு தோறும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்டம் வாரியாக கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப் பெற்று பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழ்வளர்ச்சி இயக்குநரின் ஆணைக்கிணங்கவும், மாவட்ட ஆட்சியரின் அனுமதியின் அடிப்படையிலும் நிகழாண்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில்11 ,12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளை 09.01.2024 ஆம் தேதி (செவ்வாய்கிழமை) நாளன்றும் கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளை 10.01.2024 ஆம் (புதன்கிழமை) நாளன்றும் தஞ்சாவூர் மாவட்டம், அரசர் மேல்நிலைப் பள்ளியில் காலை 9.30 மணிமுதல் நடைபெறவுள்ளன.

இப்போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்வதற்குரிய படிவத்தை பூர்த்தி செய்து தலைமையாசிரியர் / முதல்வர்/ துறைத் தலைவரின் பரிந்துரையுடன் போட்டி தொடங்கும் முன்பு தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் அளிக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரியிலிருந்தும்கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் ஒவ்வொரு போட்டிக்கும் ஒருவர் வீதம் மொத்தம்3 மாணவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். போட்டிகளுக்குரிய தலைப்புகள் போட்டி தொடங்குவதற்கு முன்னர் மாணவர்களுக்கு அறிவிக்கப்படும்.

ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசு ரூ.10,000/-, இரண்டாம் பரிசுரூ.7,000/-, மூன்றாம் பரிசுரூ.5,000/- வீதம் மொத்தப்பரிசுத் தொகையாகரூ.132000/- காசோலையாக வழங்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர்தீபக்ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

Updated On: 28 Dec 2023 9:00 AM GMT

Related News