/* */

புவிசார்குறியீடு பெற்ற கைவினை பொருட்கள்: கலெக்டர் அலுவலகத்தில் கலைப்பெட்டகம்

தமிழகத்தில் 35 பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் பெற்றுள்ளதில் தஞ்சாவூர் மாவட்டத்தின் 8 கலைப் பொருட்கள் இடம்பெற்றுள்ளன

HIGHLIGHTS

புவிசார்குறியீடு பெற்ற  கைவினை பொருட்கள்: கலெக்டர் அலுவலகத்தில் கலைப்பெட்டகம்
X

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் புவிசார்குறியீடு பெற்ற கைவினை பொருட்களுடன் அமைக்கப்பட்டுள்ள  கலைப்பெட்டகம் 

தஞ்சாவூர் மாவட்டத்தில் புவிசார் குறியீடு பெற்ற 8 கைவினை பொருட்களை கொண்டு, கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைபெட்டகத்தை, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திறந்து வைத்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலை ஐம்பொன் சிலைகள், திருபுவனம் பட்டு சேலைகள், நாச்சியார்கோவில் குத்துவிளக்கு, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள், தஞ்சாவூர் கலைத் தட்டுகள், தஞ்சாவூர் நெட்டிவேலைப்பாடுகள், தஞ்சாவூர் ஓவியம், தஞ்சாவூர் வீணை, ஆகிய 8 கைவினை பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளது.

இதனை பொதுமக்கள் அறிந்துக் கொள்ளும் விதமாக, அதன் உற்பத்தியாளர்களிடம் இருந்து புதியதாக உருவாக்கப்பட்ட பொருள்களை பெற்று, கலெக்டர் அலுவலகத்தில் கலைப்பெட்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திறந்து வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 35 பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் பெற்று நிலையில், அதில் தஞ்சாவூர் மாவட்டத்தின் 8 கலைப் பொருட்கள் இடம்பெற்றுள்ளது. இந்த புவீசார் குறியீடு பெற்ற பொருட்களை பாதுகாக்கவும், இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் வகையில், அமைக்கப்பட்டுள்ள கலைப்பெட்டகம் சிறப்பாக அமையும் என்றார். இந்நிகழ்ச்சியில், உதவி கலெக்டர்கள், கலைப்பெட்டகத்தை வடிவமைத்து ஒருங்கிணைப்பு செய்த ஓவியர் மணிவண்ணன், வீணைக் கலைஞர் சின்னப்பா உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

Updated On: 6 Oct 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?