/* */

கொடியேற்றத்துடன் தொடங்கியது சித்திரை திருவிழா

கொடியேற்றத்துடன் தொடங்கியது சித்திரை திருவிழா
X

சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக திருத்தேரோட்டம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் 1000 ஆண்டுகள் மேல் பழமையானது, மாமன்னன் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயத்திற்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும். கடந்த ஆண்டு கொரோனா தடை உத்தரவு காரணமாக விழா முழுவதும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு சித்திரை திருவிழா கொடியேற்றம் இன்று நடைபெற்றது. முன்னதாக பிரம்மாண்ட கொடிமரத்திற்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் ரிஷிப சின்னம் பொறிக்கப்பட்ட கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. இந்நிலையில் நேற்று தமிழக அரசு திருவிழாக்கள் நடத்த கூடாது என தடை விதிக்கப்பட்ட நிலையில், பெரிய கோவிலில் சித்திரை திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோயில் வளாகத்திலேயே நடைபெற உள்ளது, விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வருகிற 23ஆம் தேதி நடைபெற இருந்தது. தடை உத்தரவு காரணமாக திருத்தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Updated On: 9 April 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  3. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  4. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  7. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  9. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  10. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!