/* */

தஞ்சாவூர் அருகே அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் கிராம மக்கள்...!

பள்ளிக்கூடம், ரேஷன் கடை, மருத்துவ வசதி, பேருந்து வசதி, குடிநீர் என எந்த வசதியும் இல்லாமல் அகதிகளாக வாழும் கிராம மக்கள்

HIGHLIGHTS

தஞ்சாவூர் அருகே அடிப்படை  வசதிகளின்றி தவிக்கும் கிராம மக்கள்...!
X

தஞ்சாவூர் அருகே உசிலம்பட்டி கிராமத்தில் மோசமான நிலையில் உள்ள தண்ணீர்த்தொட்டி

பள்ளிக்கூடம், ரேஷன் கடை, மருத்துவ வசதி, பேருந்து வசதி, குடிநீர் என எந்த வசதியும் இல்லாமல் அகதிகள் போல் வாழும் கிராம மக்கள். ஐந்து வயது ஆகிய ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் 5 கிலோமீட்டர் பள்ளிக்கு நடந்து செல்ல வேண்டிய அவலநிலை.

தஞ்சாவூர் மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள கிThe baseராமம் உசிலம்பட்டி. அருகே புதுக்கோட்டை மாவட்டத்தையும், திருச்சி மாவட்டத்தையும் எல்லையாக கொண்டுள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பிரதான தொழில் விறகு வெட்டுவது, வாருகோல் பின்னுவது. வானம் பார்த்த பூமி என்பதால் விவசாய தொழிலும் இப்பகுதியில் கிடையாது. அதனால் அவர்கள் பெரிதும் நம்பி இருப்பது நூறு நாள் வேலையை மட்டுமே. அதுவும் முறையாக வழங்கபடுவதில்லை என கூறுகின்றனர். அரசு வழங்கும் இலவச அரசி தான் இவர்களுக்கு ஜீவதாரமாக உள்ளது.

அந்த அரிசி வாங்குவதற்கும் பத்து கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் இப்பகுதி மக்கள். சாலை வழியாக சென்றால் குறைந்தது பத்து கிலோமீட்டர், வரப்புகளின் வழியே சென்றால் ஐந்து கிலோமீட்டர், ஆனால் நிலத்திற்கு சொந்தகாரர்கள் முள்செடிகளை வெட்டி போட்டு பாதையை தடுத்தவிடுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

+௬+இங்கு சுமார் 80க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். ஆனால் இவர்களுக்கு பள்ளிக்கூடம், இப்பகுதியில் இல்லாததால், புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளுக்கோட்டை சென்று படித்து வருவதாகவும், சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு குழந்தைகள் சென்று வருவதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், இதனால் மாணவர்கள் உயிர் இழக்கும் நிலை ஏற்படுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

5 வயதேயான சிறுவன், 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடந்து செல்வதால், குழந்தைகள் திரும்பி வீடு வரும்வரை தங்களுடைய உயிரை மடியில் கட்டிக்கொண்டு காத்திருப்பதாக கண்ணீர் சிந்துகின்றனர். இங்கு இருந்த பள்ளிக்கூடத்தையும் 10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு மூடி விட்டதாகவும், எனவே உடனடியாக குழந்தைகளின் நலன் கருதி இப்பகுதியில் பள்ளிக்கூடத்தை மீண்டும் திறக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சுகாதாரமற்ற குடிநீரை பருகுவதால் அடிக்கடி நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையம் கூட இங்கு இல்லை. ஏதாவது மருத்துவ அவசர உதவி என்றால் கூட இங்கிருந்து 20 கிலோமீட்டர் தொலைவுள்ள தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருப்பதாகவும், ஆனால், அதற்கு கூட போதிய போக்குவரத்து வசதிகள், பேருந்து வசதிகள் இல்லாமல் தவித்து வருவதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பள்ளிக்கூடம், ரேஷன் கடை, பேருந்து வசதி, குடிநீர் வசதி என எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இன்றி அகதிகள் போல் வாழ்வதாகவும், மின்சாரத்தை தவிர இங்கு எதுவும் இல்லை என அவர்கள் கண்ணீர் வடிக்கின்றனர். உலகம் வேகமாக வளர்ச்சி பெற்றுவரும் நிலையில், தங்கள் கிராமம் மட்டும் 50 ஆண்டு காலம் பின்னோக்கி சென்று கொண்டிருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Updated On: 2 Sep 2021 1:45 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  3. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  4. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  6. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  8. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  9. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...