/* */

மகளிர் மட்டும் கலந்து கொண்ட விழிப்புணர்வுப் பேரணி

மகளிர் மட்டும் கலந்து கொண்ட விழிப்புணர்வுப் பேரணி
X

தஞ்சாவூரில் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்த ராவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தஞ்சாவூர் ரயில் நிலைய வளாகத்தில் பொதுமக்களிடையே வாக்குப்பதிவில் அவசியத்தை வலியுறுத்தி இன்று பெண்கள் மட்டும் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இப்பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான கோவிந்த ராவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இப்பேரணியில் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய், கோட்டாட்சியர் வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் திரளான மகளிர் கலந்து கொண்டு வாக்களிப்பது ஜனநாயக கடமை, வாக்களிப்பது நமது உரிமை, எனது வாக்கு விற்பனைக்கு அல்ல உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய வண்ணம் ஊர்வலத்தில் பங்கேற்றனர். தஞ்சை ரயில் நிலைய வளாகத்தில் தொடங்கிய இப்பேரணி நகரின் முக்கிய வழியாக சென்று தஞ்சை பனகல் கட்டிட வளாகத்தில் நிறைவடைந்தது.

Updated On: 13 March 2021 5:31 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?