/* */

தமிழக அரசுக்கும் விவசாயிகளுக்கும் மூத்த வேளாண் குழு அறிவுரை.

தமிழக அரசுக்கும் விவசாயிகளுக்கும் மூத்த வேளாண் குழு அறிவுரை.
X

நடப்பாண்டில் மேட்டூர் அணை எப்போது திறக்க வேண்டும், விவசாயிகள் எப்போது குறுவை பணிகளை தொடங்க வேண்டும் என தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுநர்கள் குழு தமிழக அரசு அறிக்கை பரிந்துரை செய்துள்ளது.

காவிரியால் திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட 13 மாவட்டங்கள் பாசன வசதி பெறுகிறது. பொதுவாக டெல்டா மாவட்டங்களில் குறுவை 3.5 லட்சம் ஏக்கரும், சம்பா 11லட்சம் ஏக்கரும், தாளடி 3.25 லட்சம் ஏக்கரும் சாகுபடி மேற்கொள்ளப்படும்.

இப்பாசனத்திற்கு சுமார் 250 டி.எம்.சிக்கு மேல் நீர் தேவைப்படும். தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணையில் 62 டி.எம்.சி தண்ணீர் தான் உள்ளது. மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி 167 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடகவிலிருந்து பெறப்படும் சூழ்நிலையில் 230 டி.எம்.சி தண்ணீர் தான் கிடைக்கும்.

இந்த பற்றாக்குறையை சரி செய்ய வேளாண் வல்லநர்கள் குழு சில பரிந்துரைகளை தமிழக அரசுக்கு தெரிவித்துள்ளது.

ஜூன் 12ல் தண்ணீர் மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடுவதை முன்கூட்டியே விவசாயிகளுக்கு அறிவிக்க வேண்டும். நிலத்தடி நீர்; வசதியுள்ள இடங்களில் எல்லாம் குறுவைக்கு நாற்றுவிட்டு அணை திறப்பதற்கு முன்பு நடவும் முடித்திட வேண்டும்.

நிலத்தடி நீரை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு மே, ஜூன் மாதங்களில் தட்டுப்பாடின்றி மும்முனை மின்சாரம் கிடைக்கச் செய்யவேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி கர்நாடகவிடமிருந்து தண்ணீரை பெற்றிட அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

அணை திறப்பதற்கு முன்பாகவே ஆறுகள், வாய்க்கால்ள், ஏரிகள் போன்றவற்றில மராமத்து பணிகள் மற்றும் தூர் வாரும் பணிகளை அரசு முடித்திடவேண்டும். மழைநீரை முழுமையாக பயன்படுத்திட சம்பா சாகுபடி பரப்பில் 50 விழுக்காடு நேரடி நெல் விதைப்பை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்த நடைமுறைகளை பின்பற்றினால் நீர் பற்றாக்குறையை போக்கி சாகுபடி இலக்கை அடைய முடியும் என தெரிவித்துள்ளனர்.

இக்குழு ஒவ்வொரு ஆண்டும் அரசுக்கு ஆலோசனை வழங்கி வருவது குறிப்பிடத் தக்கது.

Updated On: 12 May 2021 6:45 AM GMT

Related News