/* */

உலக பாம்புகள் தினம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய பள்ளி மாணவ, மாணவிகள்

குற்றாலத்தில் உலக பாம்புகள் தினத்தையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

HIGHLIGHTS

உலக பாம்புகள் தினம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய பள்ளி மாணவ, மாணவிகள்
X

உலக பாம்புகள் தினத்தையொட்டி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் பள்ளி மாணவ, மாணவிகள்.

இந்தியாவில் மட்டும் 300 வகையான பாம்புகள் உள்ளது. இந்த பாம்புகளை பாதுகாக்கும் வண்ணம் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ராமசாமி பிள்ளை பள்ளி மாணவ மாணவியர்கள், ரோட்டரி கிளப், தன்னார்வலர்கள் இணைந்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

பேரணியை தென்காசி காவல் துணை கண்காணிப்பாளர் மணிமாறன் தொடங்கி வைத்தார். பேரணி குற்றாலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று வனத்துறை அலுவலகத்தை அடைந்தது. பாம்புகள் பாதுகாப்பு குறித்து பதாகைகள் மற்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பாம்புகள் பற்றிய தவறான தகவல் பரப்ப வேண்டாம் வீட்டுக்கு வரும் பாம்புகளை தொந்தரவு செய்யாமல் அருகில் இருக்கக்கூடிய வனத்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தால் அவர்கள் அதனை மீட்டு காட்டிற்குள் விடுவார்கள். இந்தியாவில் 300 வகையான பாம்புகள் உள்ளது அதில் 70 வகை தான் விஷப்பாம்புகள். 4 வகையான விஷ பாம்புகள் மட்டும் தான் குடியிருப்பு பகுதியில் வாழ்கிறது.

குடியிருப்பு பகுதிகளில் சுத்தம் இல்லாத காரணத்தினால் தான் பாம்புகள் அதிகமாக வருகின்றன. நமது மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை பகுதியில் இருப்பதால் இங்கு ராஜநாகம் அதிக அளவில் உள்ளது. தற்போது அனைத்து பகுதிகளும் பாம்புகள் வாழும் சீதோசனை இருப்பதால் மனிதர்கள் இருக்கும் இடத்திற்கு வர தொடங்கியுள்ளது. எனவே பாம்புகளை பாதுகாப்போம் என பேரணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

Updated On: 16 July 2022 1:48 PM GMT

Related News