/* */

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் கைது

தென்காசி அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் கைது.

HIGHLIGHTS

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் கைது
X

தென்காசி மாவட்டம் குணரமநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர்.

தென்காசிமாவட்டம் குணராமநல்லூர் ஊராட்சி உட்பட்ட மேலமெஞ்ஞானபுரத்தில் தனியார்க்கு சொந்தமான கல்குவாரி செயல்பட்டு வருகின்றது. இந்த கோரியில் இரவு நேரங்களில் வெடி வெடிப்பதால் குடியிருப்பு பகுதியில் மிகுந்த பாதிப்பு அடைந்து வருவதாகவும் அளவுக்கு அதிமாக கனிமங்களை வெட்டி எடுப்பதால் நிலத்தடி நீர் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது என இப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை கல்குவாரியை மூட மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த நிலையில் குணராமநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் அருண் சங்கர் தலைமையில், ஊழல் ஒழிப்பு பேரமைப்பு செயலாளர் ஜோசப் முன்னிலையில் கல் குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி 50க்கும் மேற்பட்டோர் கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் அரசு உத்தரவை மீறி ஒன்றுகூடி முற்றுகையில் ஈடுபட்டதால் குற்றாலம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Updated On: 6 Aug 2021 2:26 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?