/* */

சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை ஆரம்பம்

சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை, அறிவியல் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை வரும் 25ஆம் தேதி துவங்குகிறது.

HIGHLIGHTS

சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியில்  மாணவர் சேர்க்கை ஆரம்பம்
X

சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை, அறிவியல் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை வரும் 25ஆம் தேதி முதல் துவங்குகிறது. இது குறித்து கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில்,

கொரோனா பெருந்தொற்று காரணமாக 2021- 22 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக பெறப்பட்டன. இதனைத்தொடர்ந்து, முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி துவங்குகிறது.

முதல் நாளில் சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், தேசிய மாணவர் படை மாணவர்கள் மற்றும் விளையாட்டு பிரிவில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

26ம் தேதி பிஎஸ்சி கணினி அறிவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், நுண்ணுயிரியல் பாடங்களுக்கான மாணவ,-மாணவியர் சேர்க்கை நடைபெறும்

இம்மாதம் 31ஆம் தேதி பிகாம்., பிபிஏ., பிஏ பொருளாதாரம் ஆகிய மாணவ-மாணவிகளுக்கான சேர்க்கையும், செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதி பிஏ தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களுக்கான மாணவ மாணவியர் சேர்க்கையும் நடைபெறுகிறது.

ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து, சேர்க்கையில் கலந்து கொள்ளும் மாணவ மாணவியர், ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த விண்ணப்ப படிவம், 10, 11மற்றும் 12ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் பட்டியல்கள், அசல் சாதி சான்றிதழ், அசல் மாற்றுச்சான்றிதழ், ஆதார் கார்டு மற்றும் அவற்றின் நகல், 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், சேர்க்கை கட்டணம் ஆகியவற்றுடன் அந்தந்த பாடங்களுக்கு உரிய சேர்க்கை நாட்களில் கல்லூரிக்கு 9:30 மணிக்கு நேரில் வர வேண்டும். மேலும் தகவல்களுக்கு 04633- 26088 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ஜெயா தெரிவித்துள்ளார்.

Updated On: 22 Aug 2021 8:24 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  2. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  3. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  4. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  5. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  9. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
  10. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?