/* */

தென்காசியில் எஸ்சி - எஸ்டி அலுவலர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்

தென்காசி மாவட்ட எஸ்சி - எஸ்டி அலுவலர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

தென்காசியில் எஸ்சி - எஸ்டி அலுவலர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்
X

தென்காசி மாவட்ட எஸ்சி - எஸ்டி அலுவலர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு எஸ்சி எஸ்டி அலுவலர் நல சங்கத்தின் தென்காசி மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ச.ஆசைத்தம்பி தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சதீஷ்குமார், மாவட்ட மகளிர் பிரிவு செயலாளர் எ‌.ஜெயா, மாவட்ட அமைப்பு செயலாளர் செ‌.சுடலைமணி மாவட்ட பிரச்சார குழு செயலாளர் வே.ஜின்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி மாவட்ட செயலாளர் ரஞ்சித் குமார் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசு எஸ்சி எஸ்டி அலுவலர் நல சங்கத்தின் பொதுச்செயலாளர் கே.பி.ஜி.திலகர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- தமிழகத்தில் எஸ்சி எஸ்டி என பணியாளர்களின் முன்னேற்றத்திற்காகவும் அவர்களது சமூக சமத்துவத்திற்கான இந்த சங்கம் 1976ஆம் ஆண்டு துவக்கப்பட்டு தமிழகம் முழுவதும் மாவட்ட கிளைகள் அமைத்து சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டு கடந்த 46 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

அண்ணல் அம்பேத்கரின் பிறந்த தினத்தன்று அரசு அலுவலகங்களில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றிட ஆணை பிறப்பித்தது எஸ்சி எஸ்டி பின்னடைவு 10,402பணியிடங்களை சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் மூலம் நிரப்பிட அரசு ஆணை பிறப்பித்த தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறோம். அண்ணல் அம்பேத்கரின் பிறந்த தினத்தில் தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் அரசாணை எண் 65 இன் படி அனைத்து துறைகளிலும் எஸ்சி எஸ்டி பணியாளர்களின் குறைதீர்க்கும் பற்றாளர் கூட்டம் நடத்திட வேண்டும். தமிழகத்தில் சாலைகள் தெருக்களில் பெயரோடு உள்ள சாதி பெயரை நீக்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

19 ஆண்டுகளாக பணியாற்றி வரும் டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் சாதி ஆணவக் கொலைகளை தடுத்து நிறுத்தவும் சாதிமறுப்புத் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி பேரூராட்சிகளில் பணிபுரியும், தூய்மை பணியாளர்களுக்கு மழை கோட் செருப்பு யூனிஃபர்ம் சோப்பு போன்ற அத்தியாவசிய மற்றும் உபகரணங்கள் வழங்க வேண்டும். குரு அண்ண மற்றும்

சுனாமி தாக்குதல் தானே புயல் வருதா புயல் போன்ற இக்கட்டான நேரங்களில் உயிரை பணயம் வைத்து பணி புரிந்த தூய்மை பணியாளர்களுக்கு தமிழக முதல்வர் அறிவித்த ஊக்க நிதி ரூபாய் பதினைந்தாயிரம் உடனடியாக வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளர்களுக்கு கல்வி தகுதியின் அடிப்படையில் பணி உயர்வு வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் டாக்டர் அம்பேத்கர் திருவுருவப் படம் நிறுவ வேண்டும் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 14 ஆவது ஊதிய ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டும் பொதுப்பணித்துறை நீர்வள துறை யில் 10 ஆண்டுகள் பணி முடித்த தினக்கூலி பணியாளர்களை பணிநிரந்தரம் செய்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு எஸ்சி எஸ்டி அலுவலர் நல சங்கத்தின் மாநில நிர்வாகிகள் நாகூர், பி.வேல்முருகன், எஸ் ஈஸ்வரன் எஸ் விமல்ராஜ் எல்.திரு நந்தன், டாக்டர் எம் விஜய், பி.நாகராஜ், எம். கோவிந்தசாமி டாக்டர் சி.முனியாண்டி, டி.ரவி, எம்.செல்வம், டாக்டர் எஸ்.வீரமணி, கலைச் செல்வி, டாக்டர் எம். வேலுச்சாமி, கே ன.சந்திரசேகரன். மற்றும் மாவட்ட நிர்வாகிகள், வெ.ஜின்னா, செ.ஹரிஹரன், எ.அருண் குமார், செ.மணிகண்டன், மு.ஜெகநாதன், க.தாசையா, எம்.சண்முகவேல், வி.கணபதி, எம்.பரமசிவன், க. மாரி, வி.எஸ். வேல்முருகன், எஸ்.ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர் முடிவில் தமிழ்நாடு அரசு எஸ்சி எஸ்டி அலுவலர் நல சங்கத்தின் தென்காசி மாவட்ட பொருளாளர் பி.முருகன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

Updated On: 13 Jun 2022 5:44 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  3. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  5. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  7. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  8. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  9. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  10. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...