/* */

ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா: காங்கிரஸ் கட்சி சார்பில் மரியாதை

சுரண்டையில் நடைபெற்ற ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழாவில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா: காங்கிரஸ் கட்சி சார்பில் மரியாதை
X

சுரண்டையில் ராஜிவ் காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

நாடு முழுவதும் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா காங்கிரஸ் கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது . அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் சுரண்டை நகர காங்கிரஸ் சார்பில், முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் 71வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. விழாவிற்கு நகர காங்கிரஸ் தலைவர் எஸகேடி ஜெயபால் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஏகேஎஸ்டி சேர்மசெல்வம் முன்னிலை வகித்தனர். தென்காசி எம்எல்ஏவும், தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவருமாகிய எஸ்‌‌.பழனி நாடார்‌ முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் சந்திரன் உட்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 20 Aug 2021 5:45 AM GMT

Related News