/* */

சுரண்டை நகராட்சியை தூய்மை நகராக மாற்ற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்

தென்காசி தனி மாவட்டமான பின்னர் 24.08.2021 அன்று. 27 வார்டுகள் கொண்ட நகராட்சியாக ஆனது

HIGHLIGHTS

சுரண்டை  நகராட்சியை தூய்மை நகராக மாற்ற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்
X

: சுரண்டை நகராட்சியை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சி நகர்மன்ற தலைவர் வள்ளி முருகன் தொடங்கி வைத்தார்.

சுரண்டையை தூய்மை நகராட்சியாக மாற்ற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார் நகராட்சித் தலைவர் வள்ளி முருகன் .

ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு கிராமமாக இருந்த சுரண்டை ஜமீன்களால் ஆளப்பட்டு வந்தது. சுரண்டை ஜமீன் அதிக வனப்பகுதியைக் கொண்ட பகுதி. இந்த சுரண்டை ஜமீனுக்கு 700 ஆண்டு வரலாறு சொல்லப்படுகிறது. சுரண்டை ஜமீன் சொந்தக்காரர்கள் பாண்டியர்களின் வழித் தோன்றல்கள் என்றும் நாயக்கர் காலத்தில் சுரண்டை பாளையமாக மாறியது என்றும், பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அது ஜமீனாக மாறியது என்றும் கூறப்படுகிறது. கீழ சுரண்டை, பங்களா சுரண்டை, மேலச் சுரண்டை என்ற மூன்று ஊர்களைக் கொண்டதுதான் சுரண்டை. 14 ஆம் நூற்றாண்டில் சுரண்டை ஜமீன் தோன்றியது என திருநெல்வேலி சரித்திரம் எழுதிய கால்டுவெல் கூறுகிறார். அழகு பார்வதி அம்மன் கோயில் இங்குள்ள அனைத்து சமுதாய மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக உள்ளது.

இங்கு குடியேறிய மக்களின் அயராத உழைப்பு காரணமாக படிப்படியாக உயர்ந்த இந்த கிராமம் 1980 காலகட்டத்தில் பேரூராட்சியாக தரம் உயர்ந்தது. இந்நகரத்தில் இல்லாத வசதிகளே இல்லை எனும் வகையில் மாநகராட்சிகளின் வளர்ச்சிக்கு இணையாக வளர்ந்து வந்தது. இந்நிலையில் திருநெல்வேலியில் இருந்து தென்காசி தனி மாவட்டமான பின்னர் 24.08.2021 அன்று நகராட்சியாக மாற்றப்பட்டு அரசாணை வெளியானது. 27 வார்டுகள் கொண்ட இந்த நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் புதிதாக உருவான சுரண்டை நகராட்சியின் முதல் தலைவராக காங்கிரஸ் கட்சியை சார்ந்த வள்ளி முருகன் பதவி வகித்து வருகிறார். புதிய நகராட்சி என்பதால் நகராட்சியை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பொது மக்களும் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்று பல்வேறு இடங்களில் நகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதேபோல் நகராட்சியை தூய்மையாக வைக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. கழிவு நீர் ஓடைகள், சாக்கடை, வடிகால் ஓடைகள், மற்றும் சாலை வசதிகள், குடிநீர் வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நகராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மூலம் சுரண்டை நகரை சுத்தப்படுத்தும் பணி தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு நகராட்சி தலைவர் வள்ளி முருகன் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது: பொதுமக்கள் அனைவரும் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும்.

ஹோட்டல் மற்றும் மருத்துவமனையில் உள்ள கழிவுகளை செண்ப கால்வாயில் வீசாமல் துப்புரவு பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். சுரண்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நோட்டீஸ் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நகராட்சியை தூய்மையாக வைத்துக் கொள்வதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.இதைத்தொடர்ந்து சுரண்டை பகுதியில் ஓட்டப்பட்டு இருந்த சுவரொட்டிகளை அகற்றும் பணி நடைபெற்றது. பின்னர் அங்கு நகராட்சி சார்பில் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டது.

இதில் சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி, வீரவேல் சிவகுருநாதன், சூப்பர்வைசர் நவநீதகிருஷ்ணன், மதியழகன், சிவா, செல்வக்குமார், மாடசாமி, மகேந்திரன், மாரி செல்வம், சாம், சுந்தரவேல், சுகாதார விழிப்புணர்வு பரப்புரையாளர்கள் சங்கீதா,வனிதா,சலோமியா, பூமாரி, சுசீலா, மகாலட்சுமி, சுகாதார மேற்பார்வையாளர்கள், மற்றும் டி.பி.சி. பணியாளர்கள், நகர் மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 13 Dec 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  2. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  3. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  4. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  7. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்