/* */

தென்காசி ஆட்சியர் அலுவலகம் முன்பு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

HIGHLIGHTS

தென்காசி ஆட்சியர் அலுவலகம் முன்பு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
X

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தென்காசி மாவட்டத்தில் தனியார் கோழி வளர்ப்பு நிறுவனங்கள் நியாயமற்ற முறையில் செயல்படுவதாக கூறி கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் 100க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட கறிக் கோழி வளர்க்கும் பண்ணைகள் உள்ளது. கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளுக்கு தனியார் நிறுவனங்கள் மூலம் கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டு அதை வளர்த்து கோழியாக நிறுவனத்திற்கு கொடுப்பதற்கான கூலி கடந்த 10 வருடங்களாக உயர்த்தி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை கண்டித்து கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர் விவசாய சங்கம் சார்பில் 100க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு ஆட்சியர் கோபால சுந்தரராஜிடம் மனு அளித்தனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், கோழி வளர்ப்பதற்கான மூலப்பொருட்கள் விலை, வேலையாட்கள் ஊதியம் ஆகியவை உயர்ந்துள்ளது. இருந்தபோதிலும் கோழி வளர்ப்பதர்கான கூலி 6.50 பைசாவில் மட்டுமே உள்ளதால் அதனை ரூ.12 ஆக உயர்த்தி நிரந்தரமாக வழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். இல்லையெனில் 29-ஆம் தேதியில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Updated On: 25 April 2022 2:51 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  2. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  3. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  4. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  6. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  7. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  8. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!