/* */

தமிழகத்தில் லோக் ஆயுக்தா கொண்டு வர வேண்டும் - ஆம் ஆத்மி மாநில தலைவர்

தமிழகத்தில் லோக் ஆயுக்தா கொண்டு வர வேண்டும் - குற்றாலத்தில் ஆம் ஆத்மி மாநில தலைவர் வசீகரன் பேட்டி.

HIGHLIGHTS

தமிழகத்தில் லோக் ஆயுக்தா கொண்டு வர வேண்டும் - ஆம் ஆத்மி மாநில தலைவர்
X

குற்றாலத்தில் ஆம் ஆத்மி மாநில தலைவர் வசீகரன் பேட்டி.

தென்காசி மாவட்டத்தில் இரண்டு இடங்களில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கடந்த இரண்டு நாட்களாக தமிழக ஆம் ஆத்மி மாநில தலைவர் வசீகரன் பிரச்சாரம் செய்ய வந்துள்ளார். அவர் இன்று குற்றாலத்தில் உள்ள தனியார் விடுதியில் வைத்து பத்திரிகையாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது.

தென்காசி மாவட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் இரண்டு வேட்பாளர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுகிறார்கள் இதில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 9வது வார்டில் ராமசாமி என்ற வேட்பாளரும் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் 19வது வார்டில் பொன்சேகா என்ற வேட்பாளரும் ஆம் ஆத்மி கட்சி சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகிறார்கள் அவர்களை ஆதரித்து இரண்டு நாட்களாக அப்பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு பொதுமக்களிடம் ஆம் ஆத்மி கட்சியின் சின்னமான துடைப்பம் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் நான் பிரச்சாரத்திற்கு சென்றபோது அனைத்து இடங்களிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை உடனடியாக கொண்டுவர வேண்டும் அப்படிக் கொண்டு வந்தால்தான் எதிர்க்கட்சியினர் செய்த தவறுகள் மற்றும் ஆளும் கட்சியினர் செய்யும் தவறுகளை ஒரு வருடத்திற்கு கண்டுபிடித்து தண்டனைக்கு உள்ளாக்க முடியும் இதன் மூலமாக சிறந்த மக்கள் ஆட்சியை நடத்த முடியும். தமிழக முதல்வராக தொடர்ந்து வெற்றி பெற்று மக்கள் மனதில் இடம்பெற ஸ்டாலின் விரும்பினால் உடனடியாக தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை கொண்டு வரவேண்டும். தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்ற முறை மிகவும் தவறாக உள்ளது ஏனென்றால் அவர்கள் குறிப்பிட்டுள்ள படி குறிப்பிட்ட பேருந்தில் மட்டுமே பெண்களுக்கு இலவச பயணம் அனுமதிக்கப்படுகிறது. குறிப்பிட்ட பேருந்துகள் அனைத்து பகுதிகளுக்கும் குறைந்த அளவிலேயே இயக்கப்படுவதால் இதன் மூலம் அனைத்து பெண்களுக்கும் பயன் பெற முடியவில்லை எனவே உடனடியாக தமிழக அரசு அனைத்து பேருந்துகளிலும் பெண்களை இலவச பயணத்திற்கு அனுமதிக்க வேண்டும்.

தமிழகத்தின் பிரதான சுற்றுலா தலமாக விளங்கும் தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவிகளில் பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கப்பட வேண்டும் அனைத்து சுற்றுலா தளங்களும் திறக்கப்பட்டுள்ள நிலையில் தென்காசி மாவட்டத்தின் பிரதான சுற்றுலா தளமாகவும் அப்பகுதி வியாபாரிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் குற்றாலம் அருவிகளில் அனைத்து பொதுமக்களும் குளிக்க அனுமதி வழங்கி உடனடியாக தமிழக அரசு உத்தரவிட வேண்டும். மேலும் நான் பிரச்சாரம் செய்வதற்காக கீழப்பாவூர் மற்றும் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்ற இடங்களில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்க்கும் நபர்களுக்கு நாளொன்றுக்கு 273 ரூபாய் என்ற சம்பளத்தை அவர்கள் 200 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாக குறை கூறினார்கள். எனவே இது குறித்து தமிழக அரசு உடனடியாக விசாரணை செய்து முழு அளவிலான சம்பளமும் வேலை பார்க்கும் நபர்களுக்கு கிடைக்க உறுதி அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பேட்டியின் போது அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநில துணை பொதுச்செயலாளர் ஜோசப் ராஜா ,மாநில மகளிரணி தலைவி ஸ்டெல்லா மேரி, புதுக்கோட்டை மாவட்ட தலைவர் அப்துல் ஜாபர், வேட்பாளர்கள் ராமசாமி, பொன் சேகர், மாநில இலக்கிய அணி துணை செயலாளர் கிருஷ்ணவேணி, மாநில இளைஞர் அணி இணைச் செயலாளர் சின்ராசு, சென்னை தியாகராய நகர் பகுதி ஒருங்கிணைப்பாளர் கருணாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 4 Oct 2021 11:34 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?