/* */

உள்ளாட்சி தேர்தல்: தென்காசி மாவட்டத்தில் 26 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

தென்காசி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையில் 26 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

உள்ளாட்சி தேர்தல்: தென்காசி மாவட்டத்தில் 26 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு
X

தென்காசி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையில் 26 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. 

தென்காசி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் 6 நகராட்சிகள் மற்றும் 17 பேரூராட்சிகளுக்கு 2238 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது நேற்று நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையில் 26 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் மொத்தம் மனுக்கள் 2212 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

கடையநல்லூர் நகராட்சியில் 212 பேர் மனு அளித்திருந்த நிலையில் வேட்பு மனு பரிசீலனையில் 4 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு மொத்தமாக 208 பேர் மனு ஏற்கப்பட்டது.

தென்காசி நகராட்சியில் 206 பேர் மனு அளித்திருந்த நிலையில் வேட்பு மனு பரிசீலனையில் 1 வேட்பு மனு நிராகரிக்கப்பட்டு மொத்தமாக 205 பேர் மனு ஏற்கப்பட்டது.

புளியங்குடி நகராட்சியில் 232 பேர் மனு அளித்திருந்த நிலையில் வேட்பு மனு பரிசீலனையில் 4 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு மொத்தமாக 228 பேர் மனு ஏற்கப்பட்டது.

சங்கரன்கோவில் நகராட்சியில் 171 பேர் மனு அளித்திருந்த நிலையில் வேட்பு மனு பரிசீலனையில் 1 வேட்பு மனு நிராகரிக்கப்பட்டு மொத்தமாக 170 பேர் மனு ஏற்கப்பட்டது.

சுரண்டை நகராட்சியில் 156 பேர் மனு அளித்திருந்த நிலையில் வேட்பு மனு பரிசீலனையில் 1 வேட்பு மனு நிராகரிக்கப்பட்டு மொத்தமாக 155 பேர் மனு ஏற்கப்பட்டது.

செங்கோட்டை நகராட்சியில் 80 பேர் மனு அளித்திருந்த நிலையில் வேட்பு மனு பரிசீலனையில் 4 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு மொத்தமாக 76 பேர் மனு ஏற்கப்பட்டது.

மொத்தமாக நகராட்சிகளுக்கு 1057 பேர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் 15 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 1042 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதே போல் அச்சன்புதூர், ஆலங்குளம், ஆழ்வார்குறிச்சி, ஆய்க்குடி, குற்றாலம், இலஞ்சி, கீழப்பாவூர், மேலகரம், புதூர் செ.,பண்பொழி, ராயகிரி, சாம்பவர் வடகரை, சிவகிரி, சுந்தரபாண்டியபுரம், திருவேங்கடம், வடகரை, வாசுதேவநல்லூர், உள்ளிட்ட 17 பேரூராட்சிகளுக்கு 260 வார்டுகளுக்கு நேற்று வரை 1181 பேர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் இன்று வேட்பு மனு பரிசீலனையில் 11 பேர் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 1170 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Updated On: 6 Feb 2022 5:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?