/* */

குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு: வெள்ளத்தில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு

குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் வெள்ளத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

HIGHLIGHTS

குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு: வெள்ளத்தில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு
X

குற்றாலம் மெயின் அருவியில் நேற்று மாலை சுமார் 6 மணியளவில், வன பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தென்காசி மாவட்டம், குற்றாலம் மெயின் அருவியில் நேற்று மாலை சுமார் 6 மணியளவில், வன பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அருவியில் குளித்துக் கொண்டிருந்த 5 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அப்போது, அங்கு பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த காவலர்கள் ஒருவரை மீட்ட நிலையில், மற்ற ௪ பேரில் இருவர் தடுப்புகளை பிடித்துக் கொண்டு வெள்ளத்திலிருந்து தப்பியுள்ளனர். இரண்டு பெண்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில், பாறைகளில் முட்டி பலத்த காயமடைந்து உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் மேலும் யாரேனும் சிக்கி உள்ளார்களா? என்பது குறித்து ஆய்வு செய்து வரும் நிலையில், தற்போது சம்பவ இடத்தில் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு தென்காசி மாவட்ட ஆட்சியர் அளித்துள்ள பேட்டியில், தற்போது, குற்றாலத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு அருவியல் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் 5 பேர் எதிர்பாராத விதமாக தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுள்ள நிலையில், மூன்று பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் சென்னை பெரம்பூரைச் சேர்ந்த மல்லிகா, மற்றொருவர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கலாவதி என்றும் கூறப்படுகிறது.

தற்போது, இந்த சம்பவம் குறித்து அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது அவர்களுக்கு தேவையான இழப்பீடு ரூ.4 லட்சம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாத வண்ணம் அதிகாரிகள் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டு பாதுகாப்பை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

அதேபோல் குற்றாலம் அருவிகளில் இதற்கு முன்பு இருந்த முதலுதவி சிகிச்சை மையம் தற்போது இல்லாத சூழலால் அவசர முதலுதவி கொடுக்க முடியவில்லை என கூறப்படுகிறது. அது குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

Updated On: 28 July 2022 3:03 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?