/* */

10 நாட்களில் தென்காசி மாவட்டம் முழுவதும் 140 - CCTV கேமராக்கள்

குற்றவாளிகளை கண்டறிவதற்கு, காவல்துறையின் மூன்றாம் கண்களாக விளங்குவது CCTV கேமராக்கள் ஆகும்.

HIGHLIGHTS

10 நாட்களில் தென்காசி மாவட்டம் முழுவதும்  140 - CCTV கேமராக்கள்
X

கோப்பு படம்

தென்காசி மாவட்டம், குற்ற செயல்கள் நடக்காமல் தடுப்பதற்கும்,நடைபெற்ற குற்ற செயல்களில் உடனடியாக குற்றவாளிகளை கண்டறிவதற்கும் காவல்துறையின் மூன்றாம் கண்களாக விளங்குவது CCTV கேமராக்கள் ஆகும்.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் அறிவுரையின்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊர் பொதுமக்கள், நாட்டாமைகள் மற்றும் பெரியவர்களிடம் காவல்துறையினர் CCTV கேமராக்கள் அமைப்பதன் நன்மைகள் குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துக்கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தி,மாவட்டத்தின் முக்கியமான பகுதிகளான பேருந்து நிலையங்கள், மார்க்கெட், கோயில்கள், மக்கள் அதிகம் கூடும் பகுதிகள் மற்றும் கிராமத்தின் முக்கிய சாலைகள் போன்ற பல்வேறு இடங்களில் 10 நாட்களுக்குள் புதிதாக 140 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் உங்களது வீடுகள், கடைகள் மற்றும் நிறுவனங்களில் CCTV கேமராக்கள் அமைப்பதாக இருந்தால் காவல்துறை உதவி மையம் - 9385678039 என்ற எண்ணிற்கும் தகவலை தெரியப்படுத்தவும். என தென்காசி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

Updated On: 2 Dec 2021 1:34 PM GMT

Related News