/* */

எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செங்கோட்டை அரசு மருத்துவமனை புதிய சாதனை

எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செங்கோட்டை அரசு மருத்துவமனை புதிய சாதனை

HIGHLIGHTS

எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செங்கோட்டை அரசு மருத்துவமனை புதிய சாதனை
X

பட விளக்கம்: செங்கோட்டை அரசு மருத்துவமனை முகப்பு தோற்றம்.

தாலுகா அளவிலான அரசு மருத்துவமனையில் முதன்முறையாக எலும்பு முறிவு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு செங்கோட்டை அரசு மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள தாலுகா அரசு மருத்துவமனை துவக்கப்பட்டு கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

ஆரம்பத்தில் மிகச் சிறிய அளவில் திருவாங்கூர் மன்னர் காலத்தில் உருவாக்கப்பட்டு கேரளா அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்த இந்த மருத்துவமனை செங்கோட்டை தாலுகா தமிழகத்துடன் இணைந்த பிறகு தமிழக அரசின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகிறது.

வழக்கமாக தாலுகா அளவிலான அரசு மருத்துவமனைகளில் ஆரம்பகட்ட சிகிச்சைகள் மட்டுமே மேற்கொள்ளப்படும். சிசேரியன், மற்றும் அறுவை சிகிச்சைகள் போன்றவை மாவட்ட அளவிலான மருத்துவமனைக்கு தான் பரிந்துரை செய்யப்படுவதுண்டு.

ஆனால் சிறிய அளவிலான இந்த மருத்துவமனையில் கடந்த சில ஆண்டுகளாக படிப்படியாக சிசேரியன் அறுவை சிகிச்சை, காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை என பல்வேறு அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த மருத்துவமனையில் தலைமை மருத்துவராக செயல்பட்டு வரும் டாக்டர் ராஜேஷ் கண்ணாவின் நிர்வாகத்தின் கீழ் இங்குள்ள மருத்துவர்களும் பணியாளர்களும் நோயாளிகளுக்கு இன் முகத்துடன் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கடந்த கொரோனா காலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானவர்கள் இங்கு சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பியுள்ளனர். ஒரு உயிரிழப்பு இல்லாத வகையில் அனைவருக்கும் தரமான சிகிச்சை அளிக்கப்பட்டது இந்த மருத்துவமனையின் சாதனையாகும்.

இப்படி சத்தம் இன்றி சாதனை படைத்தவரும் இந்த மருத்துவமனைக்கு அகில இந்திய அளவில் சிறந்த அரசு தாலுகா மருத்துவமனைக்கான மத்திய அரசின் காயகல்ப விருது கடந்த ஆண்டு வழங்கப்பட்டது

இந்த வரிசையில் முதன்முறையாக எலும்பு முறிவிற்கான அறுவை சிகிச்சையும் இங்கு மேற்கொள்ளப்பட்டது. தென்காசி மாவட்ட சுகாதார பணிகள் நல இயக்குனர் டாக்டர் பிரேமலதா வழிகாட்டுதலின்படி செங்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ராஜேஷ் கண்ணா ஆலோசனையின்படி இந்த மருத்துவமனையில் நேற்று முன்தினம் முதல் முறையாக எலும்பு முறிவு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

குற்றாலம் அருகே உள்ள காசிமேஸ்வரத்தைச் சேர்ந்த ராம்குமார் என்று இளைஞருக்கு இடது கை மணிக்கட்டில் ஏற்பட்ட எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பிளேட் வைத்து பொருத்தப்பட்டு குணமாக்கப்பட்டது.

எலும்பு முறிவு மருத்துவர் ரவிச்சந்திரன், மயக்கவியல் மருத்துவர் சுபா செவிலியர்கள் அறம் வளர்த்தாள், முத்துலட்சுமி ஆகியோரை கொண்ட குழு இந்த அறுவை சிகிச்சை யை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது

இதைத் தொடர்ந்து நோயாளியின் உறவினர்கள் நண்பர்கள் மருத்துவ குழுவினருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர்

Updated On: 28 Feb 2023 1:37 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  2. அண்ணா நகர்
    சென்னை ஐஐடி யில் மேஸ்ட்ரோ இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம்
  3. திருப்பரங்குன்றம்
    செல்போன் முன்பதிவு இல்லாத பயண சீட்டுகள் விற்பனை இரு மடங்காக
  4. லைஃப்ஸ்டைல்
    பொண்ணு மாப்பிள்ளையை வாழ்த்துவோம் வாங்க..!
  5. வீடியோ
    நெல்லையை உலுக்கிய பயங்கர சம்பவம் | காதலி முன்னே கொடூரம் | Tirunelveli...
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    முன்னாள் படைவீரர்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பலத்த மழை: கொடைக்கானலில், படகு போட்டி...
  8. லைஃப்ஸ்டைல்
    அன்பான கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
  9. லைஃப்ஸ்டைல்
    'ஓருயிராய் வாழ்வோம் வா'..என அழைக்கும் திருமண வாழ்த்து..!
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பின் நண்பனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!