/* */

தென்காசியில் சமரச மையம் குறித்த விழிப்புணர்வு பேரணி

நீதிமன்றங்களில் செயல்படும் சமரச மையம் குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் தென்காசியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்ற

HIGHLIGHTS

தென்காசியில் சமரச மையம் குறித்த விழிப்புணர்வு பேரணி
X

சமரசம் மையம் குறித்த விழிப்புணர்வு பேரணியை நீதிபதிகள் தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

தென்காசி நீதிமன்றங்களில் சமரச நாள் வார விழா இன்று முதல் வருகிற 12-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், நீதிமன்றங்களில் செயல்பட்டு வரும் சமரச மையங்கள் வாயிலாக வழக்கினை நன்கு பயிற்சி பெற்ற சமரசர்களை கொண்டு வழக்கினை முடிவுக்கு கொண்டு வரலாம் என்கிற விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்திடும் வகையில் சமரச நாள் வார விழா விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.

தென்காசி ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகத்தில் தொடங்கிய பேரணிக்கு முதன்மை மாவட்ட நீதிபதி ராஜவேலு தலைமை தாங்குகினார். கூடுதல் மாவட்ட நீதிபதி அனுராதா, தலைமை குற்றவியல் நீதிபதி மனோஜ்குமார், ஒருங்கிணைப்பாளர் முதன்மை சார்பு நீதிபதி மாரீஸ்வரி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி பாஸ்கர், குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி பொன் பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விழிப்புணர்வு பேரணியில் அரசு வழக்கறிஞர்கள், நீதிமன்ற அலுவலர்கள், சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.

பேரணியின் போது பொதுமக்களிடையே சமரசம் நாடுவீர் என்ற தலைப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்ட விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்த விழிப்புணர்வு பேரணியானது நீதிமன்றத்தில் தொடங்கி தினசரி காய்கறி சந்தை, போக்குவரத்து பணிமனை வழியாகச் சென்று மீண்டும் நீதிமன்றத்தை அடைந்தது.

Updated On: 8 April 2024 3:35 PM GMT

Related News