/* */

குற்றாலத்தில் ஐப்பசி விசு திருவிழா கொடியேற்றம் நடந்தது

குற்றாலத்தில் ஐப்பசி விசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது.

HIGHLIGHTS

குற்றாலத்தில் ஐப்பசி விசு திருவிழா கொடியேற்றம் நடந்தது
X

 ஐப்பசி விசு திருவிழா  கொடியேற்றம் நடந்தது.

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்று குற்றாலம். இங்கு ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் சீசன் அருமையாக இருக்கும். இந்த காலநிலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்துக்கு வந்து செல்வது வழக்கம். அதேபோல் ஆன்மீக சுற்றுலாவுக்கும் சிறந்த இடம் குற்றாலமாகும். இங்கு புகழ்பெற்ற இந்து கோவில்கள் பல உள்ளன. அதுவும் ஐயப்பன் சீசன் காலத்தில் அனைத்து அய்யப்ப பக்தர்களும் குற்றாலம் அருவில் குளித்து விட்டு குற்றாலநாதரை தரிசித்து செல்வது உண்டு.

பஞ்ச சபைகளில் ஒன்றான சித்திர சபை தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ளது. இங்கு குற்றாலநாதர், குழல்வாய்மொழி அம்மை காட்சி தருகின்றனர். இந்த திருக்கோவிலானது சங்கு வடிவில் காட்சியளிக்கிறது. வைணவ தலமாக இருந்த இந்த தலம் சைவ தலமாக அகஸ்திய முனிவர் மாற்றியுள்ளார். முன்னொரு காலத்தில் அகஸ்தியர் கோவிலுக்கு வழிபட வந்த பொழுது அவரை வழிபட அனுமதிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து அருகே உள்ள இலஞ்சி குமாரசுவாமி திருக்கோவிலில் தங்கி மறுநாள் மாறுவேடமிட்டு குற்றாலம் கோவிலுக்கு சென்று பெருமாள் சிலையை சிவலிங்கமாக மாற்றியதாக தல வரலாறு கூறுகிறது.

தற்போது வரை லிங்கத்தின் மீது கை வைத்து அழுத்திய தடம் உள்ளது.மேலும் அருவிக்கு அருகே கோயில் அமைந்திருப்பதாலும், அகஸ்தியர் தலையில் கையை வைத்து அழுத்தியதற்காகவும், மூலவருக்கு ஜலதோஷம் மற்றும் தலைவலி ஏற்படாமல் இருக்க கசாயம் காய்ச்சும் வைபமும் இங்கு நடைபெறும். அதேபோல் இந்தக் கோவிலில் பராசக்தி பீடம் அமைந்துள்ளது. மூலிகைகளான மூலவருக்கு தனியாக சித்திர சபை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கோவிலில் அனைத்து திருவிழாக்களும் சித்திர சபை சுற்றியே ரத வீதிகள், தெப்பக்குளம் அமைந்துள்ள பகுதியில் நடைபெறுவது உண்டு.

இவ்வாறு பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட குற்றாலத்தில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான ஐப்பசி விசு திருவிழா ஞாயிற்றுக் கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடிமரத்திற்கு மஞ்சள், மாபொடி, திரவிய பொடி, பால், இளநீர், கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

தினமும் சிறப்பு பூஜைகள் மற்றும் வீதி உலா நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான வருகின்ற வியாழக்கிழமை விநாயகர், முருகர் குற்றாலநாதர் குழல்வாய்மொழி அம்மன் ஆகிய நான்கு திருத்தேர் வடம் பிடித்த நிகழ்ச்சியில் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து 15-ம் தேதி நடராஜமூர்த்திக்கு தாண்டவ தீபாரதனையும், பதினாறாம் தேதி சித்திர சபையில் உள்ள நடராஜருக்கு தாண்டவ தீபாராதனையும் சிறப்பு அபிஷேகமும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாட்டினை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Updated On: 9 Oct 2022 5:26 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  3. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  4. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  5. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  7. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  8. லைஃப்ஸ்டைல்
    முகப்பொலிவின் மந்திரம் - சாலிசிலிக் ஆசிட்!
  9. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  10. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்