/* */

கிணற்றில் தவறி விழுந்தவர் சடலமாக மீட்கப்பட்டார்

சுரண்டையில் குடிபோதையில் ஊர் பொதுக் கிணற்றில் தவறி விழுந்தவர் சடலமாக மீட்கப்பட்டார்.

HIGHLIGHTS

கிணற்றில் தவறி விழுந்தவர் சடலமாக மீட்கப்பட்டார்
X

சுரண்டை சிவகுருநாதபுரம் விவேகானந்தர் குறுக்கு தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் சமுத்திரம் (57). சமையல் வேலை செய்து வந்தார். கடந்த 11ஆம் தேதி மாலை வேளையில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீட்டிற்கு திரும்பவில்லை. சமையல் வேலைக்கு சென்றிருக்கலாம் என குடும்ப உறுப்பினர்கள் எண்ணியிருந்தனர். தொடர்ந்து 2 நாட்களாக அவரிடமிருந்து தகவல் எதுவும் வராமல் இருக்கவே, அவரை தேடி வந்த நிலையில் இன்று ஊர் பொதுக் கிணற்றிற்கு சென்றவர்கள், சமுத்திரம் சடலமாக கிடப்பதை கண்டு குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த சுரண்டை போலீசார், மற்றும் வருவாய்த் துறையினர், சுரண்டை தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினரின் உதவியுடன் அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் மதுப்பழக்கத்திற்கு அடிமையான சமுத்திரம் குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 15 Jan 2021 6:14 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  3. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  4. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  5. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  6. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  7. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  8. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  9. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்