/* */

சிவகங்கை திருமலை மலைக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் கார்த்திகை மகா தீபம்

சிவகங்கை மாவட்டமட் திருமலை மலைக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.

HIGHLIGHTS

சிவகங்கை திருமலை மலைக்கொழுந்தீஸ்வரர் கோயிலில் கார்த்திகை மகா தீபம்
X

சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடி அருகே உள்ள திருமலை கோயிலில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடி அருகே திருமலையில் அமைந்துள்ள புராண சிறப்பு மிக்க மிகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பாகம்பிரியாள் அம்பாள் சமேத ஸ்ரீ மலைக்கொழுந்தீஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு மலை உச்சியில் கார்த்திகை தீபம் மகாதீபம் ஏற்றப்பட்டது.

மலை மீது அமைந்துள்ள சிவாலயத்தில் இரண்டு பிரதான சன்னதிகளில் சிவபெருமான் மலைக்கொழுந்தீஸ்வரர் சுவாமி ஆகவும் அம்பிகை பாகம்பிரியாள் சுவாமியாகவும் குடைவரையில் மீனாட்சி சுந்தரேஸ்வர சுவாமியும் அருள்பாலித்து வருகிறார்கள்.

கார்த்திகை தீபத் திருநாளையொட்டி மூலவர் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் அர்ச்சகர்கள் மூலவர் சன்னதியில் இருந்து பரணி தீபத்தை தலையில் ஏந்தி மலை உச்சியில் அடைந்தனர். தொடர்ந்து சிவாச்சாரியார்கள் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள மகா தீப குண்டத்துக்கு சிறப்பு பூஜை நடத்தி தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஓம் நம சிவாய சிவ கோஷங்கள் முழங்க மகா தீபம் ஏற்றப்பட்டது. மகா தீபத்துக்கு கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு மகா தீபத்தை கண்டு வழிபட்டனர்.

Updated On: 21 Nov 2021 12:32 PM GMT

Related News