/* */

கல்குறிச்சி ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பதை கைவிட மாவட்ட ஆட்சியரிடம் மனு

நகராட்சியுடன் இணைத்தால் நூறு நாள் வேலைத்திட்ட வாய்ப்பு பறிபோவதுடன் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்

HIGHLIGHTS

கல்குறிச்சி ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பதை கைவிட மாவட்ட ஆட்சியரிடம்  மனு
X

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க திரண்டு வந்த கல்குறிச்சி கிராம மக்கள்

கல்குறிச்சி ஊராட்சியை மானாமதுரை நகராட்சியுடன் இணைப்பதைக் கைவிடவேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ளது கல்குறிச்சி ஊராட்சி. இந்த ஊராட்சியில் 50க்கும் மேற்பட்ட சர்க்கஸ் கலைஞர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள் முழு நேர தொழிலாக சர்க்கஸ் தொழிலில் குழந்தைகளுடன் ஈடுபட்டு வந்தனர். அரசு குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டம் கொண்டு வந்த பிறகு, குழந்தைகளை அனைவரும் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைத்து வருகின்றனர்.

இவர்கள் 100 நாள் வேலைத்திட்டத்தின் மூலம் வேலை செய்து அதில் கிடைக்கும் கூலியில் பிள்ளைகளை படிக்க வைத்து வருகின்றனர்.தற்போது கல்குறிச்சி ஊராட்சியை மானாமதுரை நகராட்சியுடன் இணைத்தால் நூறு நாள் வேலைத்திட்ட வேலை வாய்ப்பு பறிபோகும் நிலை உருவாகும். எங்களுடைய குழந்தைகளின் படிப்பும், வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி விடும். ஆகவே அரசு கல்குறிச்சி ஊராட்சியை மானாமதுரை நகராட்சியுடன் இணைப்பதைக் கைவிடவேண்டும் என வலியுறுத்தி பள்ளி குழந்தைகளுடன் 50க்கும் மேற்பட்டவர்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து மனு அளித்தனர்.

Updated On: 11 Oct 2021 8:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...