/* */

நகராட்சி குப்பை கிடங்கில் தீவிபத்து: தீயணைப்புத் துறையினர் 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்

அடிக்கடி மர்ம நபர்களால் குப்பைக் கிடங்குக்கு தீ வைத்து விட்டு தப்பி சென்று விடுவதும், பற்றி எறியும் தீயினால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறிவிடுவதும் தொடர் கதையாகிவிட்டது.

HIGHLIGHTS

நகராட்சி குப்பை கிடங்கில்   தீவிபத்து: தீயணைப்புத் துறையினர் 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்
X

சிவகங்கை நகர எல்லைக்குள் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் திடீரென நேரிட்ட தீவிபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமானது.

சிவகங்கை, இந்திராநகர் பகுதியில்,நகராட்சியின் சார்பில் குப்பை கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.நகரின் எல்லைக்குள் அமைந்துள்ள இந்த குப்பை கிடங்கை சுற்றி, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, இந்திரா நகர் குடியிருப்பு,மின் மயானம் ஆகியவை அமைந்துள்ளன.குப்பை கிடங்கில் குப்பை மலை போல் தேங்கி இருக்கும் நிலையில், இன்று குப்பை கிடங்கிற்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவம் இடத்துக்கு வந்து சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அடிக்கடி மர்ம நபர்களால் குப்பைக் கிடங்குக்கு தீ வைத்து விட்டு தப்பி சென்று விடுவதும், பற்றி எறியும் தீயினால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறிவிடுவதும் தொடர் கதையாகிவிட்டது.

மருத்துவ கல்லூரி மருத்துவமனை நோயாளிகள் மற்றும் இந்திராநகர் குடியிருப்புவாசிகள் மூச்சு திணறல் மற்றும் சுவாசப் பிரச்சனை போன்ற பாதிப்புகளுக்கும் உள்ளாகி வருகின்றனர். இச்சூழ்நிலையில், குப்பை கிடங்கில் தீ வைத்து செல்லும் சமூக விரோதிகளை அடையாளம் கண்டு, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகுதி மக்கள் காவல்துறையினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Updated On: 23 July 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  2. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  3. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  4. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  5. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  6. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  7. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  8. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  9. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  10. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...