/* */

திராவிட அரசியலை புறம் தள்ளுவோம் :தாய்த்தமிழர் கழகம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நடந்த தாய்த் தமிழர் கழகத்தின் அரசியல் ஆலோசனை கூட்டத்தில் திராவிட அரசியலை முற்றிலும் புறந்தள்ளுவோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

HIGHLIGHTS

திராவிட அரசியலை புறம் தள்ளுவோம் :தாய்த்தமிழர் கழகம்
X

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தனியார் மகாலில் தாய்த் தமிழர் கழகத்தின் அரசியல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில அமைப்புச் செயலாளர் மற்றும் சிவகங்கை மாவட்ட செயலாளர் சேது.முனியசாமி தலைமை வகித்தார்.

சீனி மாரிமுத்து, விக்கி, மலைச்சாமி, ஜெய்சங்கர், நடேஷ்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர்கழக செயலாளர் சேகர்பாபு வரவேற்றார்.

இக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய தாய்த்தமிழர் கழகத்தின் நிறுவனர் தலைவர் பி.எம்.பாண்டியன் சிறப்புரையில் தமிழ்நாடு தமிழர்களுக்கே, வேலைவாய்ப்பு தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வழங்க வேண்டும்.

தமிழ் தேசியத்தை இப்போதுள்ள இளைஞர்கள் முன்னெடுத்து பயணிக்க வேண்டும் என கூறினார். பிற மாவட்டங்களை சார்ந்த கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது அதாவது வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திராவிட கட்சிகளோடு இணைந்து செயல்படுவதில்லை,

திராவிட அரசியலை புறம்தள்ளி தமிழ் தேசிய அரசியலை முன்னெடுப்பது, திராவிடத்தால் வீழ்த்தப்பட்ட தமிழ் சாதிகளை ஒன்றிணைத்து தமிழ் தேசிய பாதையில் பயணிப்பது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.



Updated On: 23 March 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  4. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  6. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  7. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  8. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  9. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  10. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்