/* */

பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வுகூட்டம்

நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் இயங்கவுள்ள நிலையில், இராணிப்பேட்டை பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆய்வுகூட்டம் நடைபெற்றது

HIGHLIGHTS

பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வுகூட்டம்
X

ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கரபாண்டியன்

தமிழகத்தில் கொரோனா தொற்றுகாரணமாக மூடப்பட்டுள்ள அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளை நவம்பர் 1ம் தேதி முதல் இயங்க உள்ளது. அதன்அடிப்படையில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வுகூட்டம் கலெக்டர் பாஸ்கரப்பாண்டியன் தலைமையில் ஆய்வுகூட்டம் நடந்தது.

கூட்டத்தில் அவர் பேசுகையில், கொரோனா தொற்றுகாரணமாக மூடப்பட்ட பள்ளிகளில் முதற்கட்டமாக 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலானவைகள் கடந்த மாதம் திறக்கப்பட்டுள்ளது. தற்போது, தொடக்கப்பள்ளி ,நடுநிலைப்பள்ளிகள் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையுள்ள வகுப்புகள் வரும் நவம்பர் 1ம் தேதியிலிருந்து செயல்படவுள்ளது .

அதன்படி, மாவட்டத்திலுள்ள 493 தொடக்கப் பள்ளிகள், 126 நடுநிலைப்பள்ளிகள் நகர,ஊரகப் பகுதிகள் என உள்ள 619 பள்ளிகள் உள்ளது. ஏற்கனவே 120 அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ளவைகள், மேலும் ,100 அரசு உதவிபெறும் பள்ளிகள், 65 மெட்ரிக் பள்ளிகள், 26 பிற மொழி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

ஊரக பகுதிகளில பிடிஓ, பேரூரில் செயல் அலுவலர்கள் நகராட்சிகளில் ஆணையர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகளில் ஆய்வுசெய்து குப்பைகளை அகற்றி தூய்மைசெய்ய வேண்டும். பள்ளி வளாகங்களில் உள்ள செடி கொடிகளை அகற்றி, குடிநீர் வசதிகளை ஏற்படுத்திடவேண்டும்,. பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளை சுத்தப்படுத்தி அடிப்படை கட்டமைப்புகளை சீரமைக்கவேண்டும். மேலும் பள்ளிக்கட்டங்களின் உறுதித்தன்மை ஆய்வுசெய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். நீண்ட நாட்களுக்குப்பிறகு மாணவர்கள் பள்ளிக்கு வர உள்ளதால் அவர்கள், புத்துணர்ச்சியடையும் விதத்தில் வகுப்பறைகள், கழிப்பறைகளில் தூய்மைப்பணிகளை நம் வீட்டுபிள்ளைகளுக்கு செய்வது போல செய்து முடிக்கவேண்டும். அதில் நிதிப்பிரச்சினை அல்லது புதிய பணிகளை மேற்கொள்ள வேண்டும் பட்சத்தில் எனது கவனத்திற்கு கொண்டு வரவேண்டும் என்று கூறினார்.

ஆய்வுகூட்டத்தில் மாவட்டமுதன்மை அலுவலர் அனிதா, மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி, அனைத்து ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 27 Oct 2021 12:25 PM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    சாலவாக்கத்தில் 101 கேக்குகள் வெட்டி கலைஞர் பிறந்தநாள்
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை பணிகள் தீவிரம்
  3. சோழவந்தான்
    சோழவந்தான் கோயிலில் அர்ச்சகராக பணியாற்றியவருக்கு, பணி நிறைவு விழா..!
  4. காஞ்சிபுரம்
    கோ-ஆப்டெக்ஸ் ஊழியர் சங்க பொது பேரவை விழாவில் 15 தீர்மானங்கள்..!
  5. மதுரை மாநகர்
    மதுரையில், பணப்பயன்கள் வழங்க முன்னாள் நகர கூட்டுறவு வங்கி பணியாளர்கள்...
  6. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஹாக்கி கிளப் சார்பில் நாக்அவுட் ஹாக்கி போட்டிகள்..!
  7. சோழவந்தான்
    இந்தியா கூட்டணி வெற்றி பெறும்: மதிமுக துரை வைகோ நம்பிக்கை...!
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் மோசமான நிலையில் இயக்கப்படும் அரசு நகர...
  9. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் மத்திய தேர்தல் கமிஷன் பார்வையாளர்...
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்ட நில முகவர்கள், தரகர்கள் நலச் சங்கத்தினர் எம்எல்ஏவிடம்...