/* */

7 நாட்களுக்குள் புதிய குடும்ப அட்டை; மாவட்ட ஆட்சியர் உத்தரவு

இராணிப்பேட்டை மாவட்டத்தில் குடும்ப அட்டைகள் 7 நாட்களில் வழங்க அதிகாரிகளின் ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

HIGHLIGHTS

7 நாட்களுக்குள் புதிய குடும்ப அட்டை; மாவட்ட ஆட்சியர் உத்தரவு
X

இராணிப்பேட்டை மாவட்டத்தில் குடும்ப அட்டைகள் 7, நாட்களில் வழங்க துறை அதிகாரிகளின் ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் குடும்ப அட்டைகள் 7, நாட்களில் வழங்கவும், கடைகளில் பொருட்களை கையிருப்பில் வைக்கவும் துறை அதிகாரிகளின் ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம், சோளிங்கர், நெமிலி உள்ளிட்ட 6 வட்டங்களில் கூட்டுறவுத்துறை மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறையின் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தடையின்றிப் பொருட்கள் கிடைக்க அதிகாரிகளின் பணிகள் பற்றிய ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில், புதிய அட்டைக்கு விண்ணப்பித்து தற்போது வரை நிலுவையில் உள்ளது பற்றியும் அவற்றின் மீது உரிய கவனம் செலுத்தி விரைந்து ஒரு வாரத்திற்குள் விண்ணப்பித்தவர்களுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். புதியதாக வரும் விண்ணப்பங்களையும் காலதாமதமின்றி தனிக்கவனம் செலுத்தி உடனுக்குடன் ஆய்வு செய்து 7 நாட்களுக்குள் வழங்கிட வேண்டும் வட்ட வழங்கல் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

பின்னர் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர், மாவட்டத்தில் உள்ள 614 ரேஷன் கடைகளில் உள்ள சுமார் 3லட்சத்து 39ஆயிரம் குடும்ப அட்டைகள் உள்ளது. அதில் பெரும்பாலான கடைகளில் மக்களுக்கு பச்சரிசி மற்றும் பாமாயில் வழங்கப்படாமல் உள்ளதாக புகார்கள் எழுந்து வருவதாகக் கூறப்படுகிறது.

எனவே, தமிழ்நாடு நுகர்பொருள் அலுவலர்கள் அனைத்துப் பொருட்களும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் கையிருப்பில் இருக்க வேண்டும். கடைகளில் பொருட்கள் இருப்பு இல்லாமல் விற்பனையாளர்கள் பொதுமக்களின் பிரச்சினையால் அவதியுறுகின்றனர்.

இதுகுறித்து புகார் மனுக்கள் அதிகளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகின்றன. முறையான கணக்கீடு செய்யப்பட்ட அளவில் பொருட்களை ஒரே தடவையில் கடைகளுக்கு கொண்டு சேர்ப்பதால் போக்குவரத்து செலவும் மிச்சமாகிறது. அதனால் இவ்வாரத்திற்குள் அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவிட்டார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், கூட்டுறவு இணைப்பதிவாளர் ரேணுகாம்பாள், மாவட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை, துணைப்பதிவாளர் விநியோகம் முரளிக்கண்ணன், வட்டவழங்கல் அலுவலர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலர்கள், மற்றும் கூட்டுறவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 23 Aug 2021 3:49 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?