/* */

200 மெட்ரிக் டன் பச்சைப்பயிறு கொள்முதல் செய்ய திட்டம்: கலெக்டர் அறிவிப்பு

மத்திய அரசின் நேஷனல் கோ-ஆப்ரேடிவ் மார்க்கெட்டிங் பெடரேஷன் நிறுவனம் 1 கிலோ பயிறை ₹ 72.75 -க்கு கொள்முதல் செய்கிறது

HIGHLIGHTS

200 மெட்ரிக் டன் பச்சைப்பயிறு கொள்முதல் செய்ய திட்டம்: கலெக்டர் அறிவிப்பு
X

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 200மெட்ரிக்டன் பச்சைப்பயிறு கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளதாக கலெக்டர் பாஸ்கரப் பாண்டியன் அறுவித்துள்ளார்.

விவசாயிகளின் விளைபொருளுக்கு சரியான விலை கிடைத்திட மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இராணிப்பேட்டை மாவட்டத்தில் பச்சைப்பயிறு சாகுபடி செய்துள்ள விவசாயிகளிடமிருந்து, மத்திய அரசின் நிறுவனமான நாபெட் (நேஷ்னல் கோ-ஆப்ரேடிவ் மார்க்கெட்டிங் பெடரேஷன்)நிறுவனம் பச்சைப்பயிறைக் கிலோ ஒன்றுக்கு ₹ 72.75க்கு கொள்முதல் செய்கிறது.

காவேரிப்பாக்கம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மட்டும் இம்மாதம் 12-ஆம் தேதி வரை இந்த கொள்முதல் செய்யப்பட உள்ளது. மேலும், விவசாயிகளிடமிருந்து பெறப்படும் பச்சைப்பயிறுக்கான கிரையத்தொகை யாவும் நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் 200 மெட்ரிக் டன் கொள் முதல் செய்வதற்கு இலக்கு நிர்ணயக்கப்பட்டுள்ளது. எனவே, இராணிப்பேட்டை மாவட்டத்தில் பச்சைப்பயிறு சாகுபடி செய்துள்ள விவசாயிகள், தங்களது நிலத்தின் சிட்டா, அடங்கல், வங்கிக்கணக்கு விவரம் மற்றும் ஆதார் ஆகியவற்றுடன், காவேரிப்பாக்கம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளரை 7904760772*என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்கள் அறிய, வேளாண்மை துணை இயக்குநர்- செயலாளர், வேலூர் விற்பனைக்குழு வேலூர்- என்ற முகவரிக்கு விவசாயிகள் நேரில் சென்று அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்..

Updated On: 1 Oct 2021 4:54 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  3. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  5. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  6. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  7. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  8. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  10. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...