/* */

தமிழக மீனவர்கள் கைதை கண்டித்து தங்கச்சிமடத்தில் உண்ணாவிரதப்போராட்டம்

தமிழக மீனவர்கள் கைதை கண்டித்து தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்.

HIGHLIGHTS

தமிழக மீனவர்கள் கைதை கண்டித்து தங்கச்சிமடத்தில் உண்ணாவிரதப்போராட்டம்
X

தமிழக மீனவர்கள் கைதை கண்டித்து தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

தமிழக மீனவர்கள் கைதை கண்டித்து தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரதப்போராட்டம். இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்துக்கு தமிழக மீனவர்கள் கண்டனம்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ள 68 மீனவர்களை விடுதலை செய்யக்கோரி ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் தங்கச்சிமடத்தில் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய மூன்று நாட்களிலும் புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 68 மீனவர்களையும் அவர்களது 10 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்து யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா சிறையில் அடைத்துள்ளனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்த ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக படகுடன் விடுதலை செய்யக் கோரி இன்று தங்கச்சிமடத்தில் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் வரும் 31ம் தேதி மீனவர்களை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ள நிலையில் மீனவர்களை விடுதலை செய்யாத பட்சத்தில் வரும் 1ஆம் தேதி தங்கச்சிமடத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக முடிவு செய்துள்ளனர்.இன்று நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்தில் இலங்கை மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எல்லை தாண்டும் தமிழக மீனவர்கள் மீது நடவடிக்கை தொடரும் அதே நேரத்தில் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை அரசுடமையாக்கப்படும் என தெரிவித்தார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள், எல்லை தாண்டி வரும் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் இலங்கை அரசை கண்டிக்கிறோம். தமிழ் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா கைது நடவடிக்கை தொடரும், படகுகள் அரசுடமையாக்கபடும் என தெரிவித்ததற்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

Updated On: 22 Dec 2021 10:49 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...