/* */

எஸ்டிபிஐ கட்சியின் நகராட்சி, பேரூராட்சி தேர்தலுக்கான வேட்பாளர்கள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி

இராமநாதபுரம் SDPI கட்சி சார்பாக நகராட்சி, பேரூராட்சி தேர்தலுக்கான வேட்பாளர்கள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

எஸ்டிபிஐ கட்சியின் நகராட்சி, பேரூராட்சி தேர்தலுக்கான வேட்பாளர்கள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி
X

இராமநாதபுரம் SDPI கட்சி சார்பாக நகராட்சி, பேரூராட்சி தேர்தலுக்கான வேட்பாளர்கள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இராமநாதபுரம் SDPI கட்சி சார்பாக நகராட்சி, பேரூராட்சி தேர்தலுக்கான வேட்பாளர்கள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

SDPI கட்சி இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பாக நகராட்சி, பேரூராட்சி தேர்தலுக்கான வேட்பாளர்கள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி மாவட்டத் தலைவர் ரியாஸ் கான் தலைமையில் இன்று இராமநாதபுரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி மாவட்ட துணைத் தலைவர் சுலைமான் பொதுச்செயலாளர் அப்துல் ஜமீல், மாவட்ட செயலாளர் ஆசாத் பொருளாளர் அசன் அலி மற்றும் செயற்குழு உறுப்பினர் நவர்ஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக நிகழ்ச்சியினை மாவட்ட செயலாளர் மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி (PRO) நஜ்முதீன் தொகுத்து வழங்கினார் செயலாளர் ஹனீப் வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள், மாநில செயற்குழு உறுப்பினர் Dr.ஜமீலுன் நிஷா அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்கள். மாநில பேச்சாளர் ஜஹாங்கீர் அரூஸி கருத்துரை ஆற்றினார். மேற்கு மாவட்ட தலைவர் பரகத்துல்லாஹ் வாழ்த்துரை வழங்கினார். கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ் கான் நாம் எதற்காக வெற்றி பெற வேண்டும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் மற்றும் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பைரோஸ் கான் இலகுவாக வெற்றி பெறுவது எப்படி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இறுதியாக மாவட்ட துணைத்தலைவர் சுலைமான் அவர்கள் நன்றி உரையாற்றினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் பெரியபட்டினம் ஊராட்சி ஒன்றியக் மந்திர தலைவர் அக்பர் ஜான் பீவி, உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள், தொகுதி, நகர் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 9 Nov 2021 3:31 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?