/* */

கொரோனா விழிப்புணர்வு - இந்து தெய்வமான கருப்பசாமியை இழிவுபடுத்துவதா? - இந்து முன்னணி கண்டனம்

கொரோனா விழிப்புணர்வு - இந்து தெய்வமான கருப்பசாமியை இழிவுபடுத்துவதா? - இந்து முன்னணி கண்டனம்
X

கொரோனா விழிப்புணர்வு குறித்து குறி சொல்லும் நவீன கருப்பசாமி

கொரோனா விழிப்புணர்வு என்ற பெயரில் இந்து தெய்வமான கருப்பசாமியை இழிவுபடுத்துவதா? என ராமேஸ்வரம் இந்து முன்னணி பொதுச்செயலாளர் ராமமூர்த்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராமேஸ்வரம் இந்து முன்னணி பொதுச்செயலாளர் ராமமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் இராமநாதபுரத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியில்டிகருப்பசாமி வேடமிட்ட நபர் முன் களப்பணியாளர்கள் காலில் விழுவது போன்றும், கொரோனா வந்தால் கடவுள் எல்லாம் காப்பாற்ற முடியாது எனக் கூறியும் பொதுமக்கள் மத்தியில் நடித்து கூறியுள்ளார்.

கொரோனா விழிப்புணர்வு என்ற பெயரில் இந்து மதக் கடவுளையும் இந்து மத நம்பிக்கையும் இழிவுபடுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது. கருப்பசாமி வேடமிட்டு செய்யும் இதே செயல்பாடுகளை தாங்கள் கிறிஸ்தவ, இஸ்லாமிய கடவுள்களின் பெயரில் நடத்த நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இந்நிலையில் கொரோனா விழிப்புணர்வு என்ற பெயரில் இந்து மத நம்பிக்கையும் இந்துமத கடவுளையும் இழிவுபடுத்துவது கண்டனத்திற்குரியது. இதுபோன்ற செயல்களை நிறுத்திக்கொள்ள வேண்டும் என இந்து முன்னணி சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்..


Updated On: 10 Jun 2021 2:27 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  3. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  4. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  6. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  7. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    50 சிறந்த மகளிர் தின வாழ்த்துச் செய்திகள்!
  9. ஈரோடு
    அந்தியூர் பகுதியில் பரவலாக மழை: சேற்றில் சிக்கிய அரசு பேருந்து
  10. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை