அந்தியூர் பகுதியில் பரவலாக மழை: சேற்றில் சிக்கிய அரசு பேருந்து

Erode news- சேற்றில் சிக்கிய அரசு பேருந்து பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்கப்பட்டது.
Erode news, Erode news today- அந்தியூர் பகுதியில் பரவலாக பெய்த மழையால் சேற்றில் அரசு பேருந்து சிக்கியது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் மதியம் வரை வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தது. அதைத் தொடர்ந்து, அந்தியூர், எண்ணமங்கலம், நஞ்சமடைக்குட்டை, சென்னம்பட்டி, அம்மாபேட்டை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது.
இதேபோல், அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் நேற்று மாலை 3 மணிக்கு திடீரென மழை பெய்ய தொடங்கியது. சுமார் 20 நிமிடம் பரவலாக பலத்த மழை பெய்தது. இதனால், பள்ளமான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. சாலைகளில் மழை நீர் ஓடியது. கடந்த 2 மாதங்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் நேற்று பெய்த மழையால் குளிர்ந்த தட்பவெப்ப நிலை நிலவியது.
இந்த நிலையில், தாமரைக்கரையில் இருந்து தேவர்மலைக்கு அரசு பேருந்து ஒன்று நேற்று மாலை சென்று கொண்டு இருந்தது. அப்போது மழையால் ஏற்பட்ட சேற்றில் பேருந்தின் சக்கரங்கள் சிக்கி பேருந்து நின்றது. அதன் பின்னர், பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு பேருந்து மீட்கப்பட்டது. இதனால் சுமார் 1 மணி நேரம் பயணிகள் அவதிப்பட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu