/* */

தேசிய பாதுகாப்பு படையினரின் திடீர் தீவிரவாத தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை பரபரப்பு

இராமநாதசுவாமி கோவிலில் தேசிய பாதுகாப்பு படையினரின் திடீர் தீவிரவாத தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

HIGHLIGHTS

தேசிய பாதுகாப்பு படையினரின் திடீர் தீவிரவாத தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை பரபரப்பு
X

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் தீவிரவாத தாக்குதல் தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.

பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டால் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தேசிய பாதுகாப்பு படையினர் ஒத்திகை நடத்தினர்.

இராமேஸ்வரத்தில் தேசிய பாதுகாப்பு படையின் 30 க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்த ஒத்திகைகளை மேற்கொண்டனர்.

தமிழகத்தில் இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட சில கோவில்களுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளது.

எனவே இராமநாதசுவாமி கோவிலின் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு, மாநில அரசிற்கு உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த உயர் அதிகாரிகள் இராமநாதசுவாமி திருக்கோவில் மற்றும் இராமேஸ்வரம் தீவு பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

பின்னர் இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவில் வளாகத்தில் தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த கமாண்டோக்கள் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, போலி கை துப்பாக்கியால் பொதுமக்களை பினை கைதிகளாக கடத்தி தீவிரவாத தடுப்பு பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

அப்போது கோவிலுக்குள் திடீர் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றால் மேற்கோள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், தீவிரவாதிகளின் தாக்குதல்களை முறியடித்து பொதுமக்களை பாதுகாப்பது குறித்தும் ஒத்திகையை செய்துகாட்டினர்.

30-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை கமாண்டோக்கள் கலந்துகொண்டு இந்த ஒத்திகை நிகழ்ச்சியை திடீரென கோவில் வாசலில் செய்தனர்.

இதனால், அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது. பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை சமாளிக்க பயிற்சி பெற்றுள்ள இந்த தேசிய பாதுகாப்பு படை, எந்தவிதமான சூழ்நிலைகளை சமாளிக்கும் திறன் பெற்றது.

தீவிரவாத செயல்களை முறியடிக்க எதிர்பாராத சூழ்நிலைகளில் செயல்படுவதற்காக அவ்வப்போது பயிற்சிகள் மற்றும் ஒத்திகை நடவடிக்கைகள் நடத்தப்படுவது வழக்கமான ஒன்று என பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 7 Aug 2021 6:11 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    பட்டுப்புழு கூடு உற்பத்தி பாதிப்பு; நிவாரணம் வழங்க விவசாயிகள்
  2. உலகம்
    5 நிமிடங்களில் 6,000 அடி இறங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்: ...
  3. கோவை மாநகர்
    கோவையில் தொடர் கனமழை ; இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  4. சூலூர்
    சூலூர் அருகே 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் ; விற்பனைக்கு வைத்திருந்த நபர்...
  5. இந்தியா
    போர்ஷே விபத்தில் சிக்கிய சிறுவனின் தந்தை தப்பிக்க பலே திட்டம்....
  6. காஞ்சிபுரம்
    லஞ்சம் கேட்பதாக வீடியோ வெளியான 2 மணி நேரத்தில் தீர்வு: விஏஓ...
  7. ஆன்மீகம்
    பேனா கூட கல்விக்கான ஆயுதம்தான்..! கருவிகளை போற்றுவோம்..!
  8. இந்தியா
    பாஜகவுக்கு 300 இடங்கள் கிடைக்கும்: பிரசாந்த் கிஷோர் கணிப்பு
  9. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் அருகே கிணற்றை காணவில்லை என கிராம மக்கள் ஒட்டிய போஸ்டர்
  10. வீடியோ
    🔥Soori போல் Mimicry செய்து பங்கமாய் கலாய்த்த SK | Sivakarthikeyan |...